Followers

Saturday, September 21, 2019

Alex in wonderland


Music + comedy!

வாஆஆஆட்ட்??, ஹே! ச்சி! என்ன காம்போ இது??, பிரியாணிக்கு சாம்பார் ஊத்தி சாப்பிட்ற மாதிரி! நோ! நோ! வர்க் அவ்ட் ஆகாது! – என முகம் சுழிக்கும் தோழர்களே! தோழிகளே! பட்டெனப் பக்கத்தை க்ளோஸ் செய்வதை நிறுத்தி விட்டு, தொடர்ந்து கீழே படிக்கவும்!!

இசையையும்,ஹாஸ்யத்தையும் ஒன்றிணைத்துப் புதிதாய் ஒரு சுவை படைத்து தீராப் பசியோடு காத்திருக்கும் நம் செவிகள் பலவற்றிற்கு உணவாய்க் கொடுத்து நம்மை ஒரு அதிசய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் திரு.அலெக்ஸாண்டர் பாபு.

என்னங்க... அதிசய உலகம்!?, Stand up comedy-ல இல்லாத வெரைட்டியா?, என் பக்கத்து வீட்டு மாமி கூட தான் அசத்தல் அம்புஜம்-ன்னு ஒரு youtube channel ஓபன் பண்ணி காமெடின்ற பேர்ல எல்லாரையும் காலி பண்ணிட்டு இருக்கு! இவர் என்ன புதுசா பண்ணிடப் போறார்!

நாம தான் சாஃப்ட்வேர் தலைமுறையைச் சேர்ந்தவங்களாச்சே! அதனால நம்ம பிரதான கேள்வியான what’s New in this?-ஐ கேட்டு வைப்போம்!

Alex is an energetic, young,handsome,talented..... Oh! Noooo! Wait!! Wait!


இப்படியெல்லாம் அவருக்கு நாம பில்ட்-அப் கொடுக்க முடியாது. ஏனென்றால்..

1.       அலெக்ஸ்க்கு வயசு 44. (Buahhhhh எனச் சிரிக்கும் இளசுகளே! பொறுங்கள்)
2.       இவரும் நம்மைப் போல ஒரு frustrated software engineer.
3.       எம்.எஸ்.வி, இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான் என 3 தலைமுறை இசையையும் முழுதாக ரசிக்கத் தெரிந்த மனிதர்.
4.       கொஞ்சம்ம்ம்ம்... இல்ல,இல்ல, நல்லாவே காமெடி பண்றார்!

சரி, பேசுனது போதும். ஷோ-க்குள்ள போகலாம்!

Note: இது ஒரு தங்லிஷ் ஷோ.

ராமநாதபுரத்துல பிறந்த அலெக்ஸாண்டர் பாபு சென்னை அண்ணா யுனிவர்சிட்டில engineering முடிச்சு software-ல வேலை செஞ்ச மனுஷன்! பார்த்திட்டிருந்த வேலையை அவர் வெறுக்காத நாளே இல்ல போல! கம்ப்யூட்டரோட கை,கால் கட்டப்பட்ட ஃபீல்! ஒரு கட்டத்துல அதாவது.. அவர் 40 வயசை எட்டினப்புறம் ‘உனக்கு வயசாய்டுச்சா டா மடையா’-ன்னு காலம் நடு மண்டைலயே நங்குன்னு கொட்டுனதுல மிரண்டு போய்.. இனியும் முடியாது! இப்போ கூட பிடிச்சதைப் பண்ணலேன்னா.. இனி எப்பவுமே பண்ண முடியாதுன்னு கம்ப்யூட்டர் கட்டைப் பிரிச்சு வெளியே வந்ததன் விளைவு.. இப்போ மைக்-ஐ பிடிச்சிக்கிட்டு நம்ம முன்னாடி ஸ்டேஜ்-ல நிற்கிறார்!


அவரோட இந்த 40-ஆண்டு கதைச் சுருக்கத்தை ஹிலாரியஸ்-ஆ காட்டுறாங்க எடுத்ததும்!

அதைத் தொடர்ந்து “welcome ladies and gentleman”- ன்னு சொன்னபடி ஹார்மோனியப் பெட்டியோட உள்ள வர்ற மனுஷன்.. ஒரு காலேஜ் பையன் தோற்றத்துல இருக்கிறார்! (மன்னிக்கவும்! ஒத்தையா ஒரு மனுஷன் மேடையேறி நிற்குறார்ன்னா.. தோற்றத்திலிருந்து,குரல் வரை அனைத்தையும் மதிப்பிடுகிற உரிமையை நாம் இயல்பிலேயே பெற்று விடுகிறோம்! தப்பில்லைன்னு நினைக்கிறேன்!)

எடுத்ததும் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து தொடங்குறார்! நல்லை,அல்லை பாடலை என்ன மாதிரி சொந்த வரிகளைப் போட்டு ப்ரேயர் சாங்-ஆ மாத்துறார் பாருங்க!

முன் வரிசைக்காரர்களிடம் உங்களுக்குப் பிடிச்ச கடவுள் யாருன்னு சொல்லுங்க, அவங்க பேரைப் போட்டு பாடுறேன்னு கேட்டுட்டு அவங்க இந்துக் கடவுள்களின் பெயரைச் சொல்லியதும், ஓகே! We will go with the minority gods of india !-ன்னு சொல்லிட்டு Jesus & allah-வை சேர்க்கிறார் பாட்டுல! இதுல ஜெயந்தி ஆண்ட்டி உங்களுக்கு ஓகே தான-ன்னு கேள்வி வேற!

நல்லை,அல்லை பாட்டை ஹல்லேலூயா,மாஷா அல்லா-ன்னு பாடிட்டு.. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணான்னு பாடினதும் மக்கள் கிட்ட  க்ளாப்ஸ் கிளம்புது!!


ஜோசஃப் இளங்கோ, ஜெயந்தி மேரின்னு ஆடியன்ஸ்க்கு பேர் வைக்கிறதெல்லாம் சிரிப்பு வெடி!


அடுத்ததாக மிருதங்கத்தைக் கையில் எடுத்து நலந்தானா பாட்டுக்கு தங்க்லிஷ்-ல லிரிக்ஸ்! எவ்ரிதிங்க் இஸ் ஃபைன்னு!! இடைல அவர் பேசுற எல்லாம் சிரிக்க வைக்குது!


Alice in wonderland-ல அந்தப் பொன்னு ராபிட் ஹோல்-க்குள்ள போய் தான் வண்டர்லேண்ட்-ஐப் பார்க்குறா! ஆனா.. நமக்கான.. கடவுள் கொடுத்த... வண்டர் லேண்ட்-ன்றது மியூசிக்! இசை! தமிழ் இசை!! இது தான் அவரோட thought!


-அவருக்கான இசை ஆர்வம் எங்கிருந்து வந்ததுன்றதை சொல்றவர்.. தான் கேட்டு வளர்ந்த ஆல் இண்டியா ரேடியோ,சிலோன் ரோடியோல தமிழ் திரை இசையைப் பற்றிச் சொல்றார்.


முதல்ல அவர் தொடங்குறது.. தி ஒன் அண்ட் ஒன்லி!! இசைஞானி இளையராஜாவைப் பற்றி!! இளையராஜா-ன்னு பின்புறம் ஒளி எழுந்ததும்.. கைத் தட்டுறதை நம்மால கட்டுப்படுத்த முடியுறதில்ல!! 


நான் தேடும் செவ்வந்திப் பூவிது...


இளையராஜா தானே இசையமைத்துப் பாடின இந்தப் பாட்டுல தொடக்கத்தில் வர்ற ஆலாபனையை பாடுவார்! Divine-ன்னு பல சமயம் நான் உணர்ந்த ஆலாபனை இது! காதுக்குள்ள புகுந்து... மனசைத் தடவிக் கொடுக்குற மாதிரி.. அந்தக் குரல் டக்குன்னு ஒரு அமைதியை உடம்பு முழுக்க உணர வைச்சிடும்!!

அதையே அலெக்ஸ்-ம் சொல்வார்! இசையும்,இளையராஜாவும் நம் உள்ளங்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் போல! 


மௌனமான நேரம்.....


இந்த 2 பாட்டுலயுமே ஆலாபனையை அடிச்சுக்கவே முடியாது! அந்தப் பாட்டு அமைதியை கொடுக்குதுன்னா.... இந்தப் பாட்டு.. மயக்கத்தைக் கொடுக்கும்! ஆல் பிகாஸ் ஆஃப் எஸ்.ஜானகி!


இளையராஜா மியூசிக்ல வர்ற pause & silence பத்திப் பேசி.. இவர் இந்தப் பாட்டைக் கலாய்க்கிறதெல்லாம் ஆடியன்ஸை சிரிக்க வைக்குது!


அடுத்ததா பேக் க்ரவ்ண்ட்ல மலேசியா வாசுதேவன்-ன்னு பேர் வந்ததும்! மக்கள் பொங்குறாங்க! நானும் தான்! மலேசியா வாசுதேவன் குரலை பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா?


மலேசியா வாசுதேவனுக்கு அலெக்ஸ் கொடுக்கிற இன்ட்ரோ செம! நல்லா சிரிக்க வைப்பார்!!


பூவே... இளைய பூவே.. வரம் தரும் வசந்தமே....

வாவ்வ்வ்! வாவ்வ்வ்வ்-ன்னு!! வீட்ல எல்லாரும் கைத் தட்ட ஆரம்பிச்சுட்டோம்! வாசுதேவன் வாய்ஸை வாயைப் பொளந்து தான் கேப்போம் ஒவ்வொரு தடவையும்! அலெக்ஸ் அவரைப் பத்தி பேசுனதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு!


இளையராஜாவுடனான நம் ரசனையென்பது பல சமயங்களில் எஸ்.பி.பி, யேசுதாஸைக் கேட்பதிலேயே நின்று போய் விடுகிறது! ஆனா.. மலேசியா வாசுதேவன்,ஜெயச்சந்திரன் போன்றவர்கள் பாடிய பாடல்களெல்லாம்.. மிச்சருக்குள்ள கிடக்குற முந்திரி மாதிரி! Tasteful! தன்னாலேயே அவங்க பக்கம் நம்மை ஈர்த்துடும்!!


அவர் பேசிட்டிருக்கும் போதே நம்ம மூளை ‘இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது, வா வா வசந்தமே, ஆகாய கங்கை,கோடை கால காற்றே,ஆசை நூறு வகை, கூடையில கருவாடு’-ன்னு எல்லாப் பாட்டையும் வரிசைப் படுத்த ஆரம்பிச்சிடுது!


முதல் மரியாதைல 5 பாட்டையும் பாட அவருக்கு எப்படி சான்ஸ் கிடைச்சதுன்னு சொல்ற அலெக்ஸ், But he is un appreciated, unsung hero-ன்னு ஆரம்பிச்சு அப்படியே உலகநாயகன் பக்கம் திரும்புறார்!


Ofcourse! நினைவோ ஒரு பறவை – அவரோட ஃபர்ஸ்ட் சாய்ஸ்...


எல்லாருக்கும் கமலஹாசன் பாடின பாட்டுன்னா .. முதல்ல ஞாபகம் வர்றது இது தான்! அலெக்ஸ்க்கும் அப்படித் தான் போல! அப்டியே உலகநாயகனைக் கலாய்க்கவும் செய்றார்!!


இஞ்சி இடுப்பழகி....


கமலஹாசன் குரல்ல ஒரு அழுத்தம் இருக்கும்! உச்சரிக்குற வார்த்தை ஒவ்வொன்னுக்கும் அவர் கொடுக்கிற ப்ரெஷர்.. தொண்டைல இருந்து பம்ப் ஆகி.. நாக்கைத் தொட்டு.. வாய் வழியா வெளியே ஜம்ப் அடிக்குறதை.. கேட்குற  நம்மால ஃபீல் பண்ண முடியும்! அதனால தான் ‘என் உதிரத்தின் விதை! என் உயிர் உதிர்த்த சதை!வேறொருவனின் பகவன் எனப் பொறுத்திடுவேனா?’-ன்னு  (from uthama villan) சொல்லும் போது... அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் ஆட்டம் கண்டுடுது நமக்குள்ள!


நான் மேல சொன்ன இந்த எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி அலெக்ஸ் தேர்ந்தெடுத்த அடுத்த பாட்டு..


ரகுபதி ராகவ.. ராஜா ராம்!! – ஃப்ரம் ஹே ராம்!!


நான் எமோஷனல்-ஆ வரிசைப்படுத்துறேன்! ஆனா.. ஷோ-ல கமலஹாசனை constipation,complication-ன்னு கலாய்ச்சு அலெக்ஸ் நம்மள வேறப் பக்கம் இழுத்துட்டுப் போயிட்டிருப்பார்! Constipation issue இருந்தா.. இதைப் பாடுங்கன்னு.. மனுஷன் தேர்ந்தெடுத்த அடுத்த பாட்டை பாருங்க!


போட்டு வைத்தக் காதல் திட்டம் ஓகே கண்மணி...


எத்தனை வருஷம் ஆனாலும் சரி! லவ் சக்ஸஸ் ஆனதும்.. தமிழ்நாட்டு இளைஞர்கள் பாடுற,பாடப் போற ஒரே பாட்டு இதுவாகத் தானிருக்கும்! அதனால, அலெக்ஸ்..   காவேரி அல்ல, அணை போட்டுக் கொள்ள-ன்னு ஸ்டார்ட் பண்ணதும், செம்ம சௌண்ட் ஆடியன்ஸ் சைட்!!!


அடுத்து.. ஐம்பதாண்டு காலம் தமிழ் திரை இசையை ஆண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான் அலெக்ஸோட சாய்ஸ்!!


பாங்கோ-ன்ற இன்ஸ்ட்ரூமெண்டை வைச்சு.. என்னம்மா மியூசிக் போட்டாருன்னு அலெக்ஸ் சொல்லும் போது, ஆமால்லன்னு நம்மையும் ஆச்சரியப் பட வைக்குறார் எம்.எஸ்.வி!

அடுத்து அலெக்ஸ் பாடுற ஒரு சின்ன மெட்லிக்கு.. தலை ஆட்டி, கைத் தட்டி நாம ரசிக்கலேன்னா.. உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்ல! 


காற்று வாங்கப் போனேன்.. நான் கவிதை வாங்கி வந்தேன்..

ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்....

அவளுக்கென்ன அழகிய முகம்....

பாலும்,பழமும் கைகளில் ஏந்தி..

அவள் பறந்து போனாலே.... (trust me, he was able to bring out the softness which we can only feel from PBS)

போனால் போகட்டும் போடா...

பார்த்த ஞாபகம் இல்லையோ...


வாவ்! வாவ்! வாவ்!! பெருசா தொழில்நுட்ப வளர்ச்சி எதுவும் இல்லாத காலகட்டத்துலயே இவ்ளோ அழகான மெலடிஸ்-ஐ மெல்லிசை மன்னர் இயக்கி இருக்கார்ன்னா.. அவரோட இசையறிவு,ஆர்வம் எப்பேர்ப்பட்டதா இருந்திருக்கும்! 50 வருஷமெல்லாம் கம்மி!! 500 வருஷம் தமிழ் சினிமாவுல இருந்திருக்கனும் அவர்!!


மாப்பிள்ளை டோய்,மன்னாரு டோய்! நாங்கெல்லாம் டேய்,டோய்க் குடும்பம்ன்னு எம்.எஸ்.வியையும் அலெக்ஸ் விட்டு வைக்கல! நன்னாஆஆ.. கலாய்ச்சுட்டார்!


தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..


டோய்,டோய்ன்னு இந்தப் பாட்டு உருவான விதத்தை வர்ணிக்கிற விதம்.. ஹாஹாஹா தான்!


அடுத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பத்தி பேசுவார்!! Ultimate part of the show!


டி.எம்.எஸ்,பிபிஎஸ்,சுசீலாவைப் பற்றியெல்லாம் போதுமான அளவுக்கு எத்தனையோ பேர் பேசிட்டாங்க! இனியும் பேசிட்டு தான் இருக்கப் போறோம்! ஆனா.. சீர்காழி மாதிரியான ஆட்களெல்லாம் அப்பப்போ மட்டுமே பூக்குற குறிஞ்சிப் பூ மாதிரி! அலெக்ஸ் மட்டுமில்ல.. இன்னும்,இன்னும் நிறைய பேர் இவரைப் பத்திப் பேசனும்! எல்லாருக்கும் தெரியனும்.. இது போன்ற ஆட்கள் இசையை எப்படியெல்லாம் தன் போக்கிற்கு ஆட வைத்து.. ஆண்டார்கள் என்பதை!


பிரம்ம முகூர்த்தத்தின் போது.. Seerkazhi will come online-ன்னு சொல்றதெல்லாம் செம சிரிப்பு! அவரோட ஹை பிட்ச் ஹார்மோனியப் பெட்டியைத் தாண்டி பிய்த்துக் கொண்டுப் பறப்பதைப் பற்றியெல்லாம் ஜாலியா சொல்லியிருப்பார்!

பக்திப் பாடல்களைப் பத்தி ஒருபக்கம் பேசினாலும்.. அவர் பாடின மற்றப் பாடல்களையும் மறக்காம mention பண்ணியிருக்கார்! எனக்கு அதுல ரொம்ப சந்தோஷம்.. 


காட்டு மல்லிப் பூத்திருக்க.. காவல் காரன் காத்திருக்க..

காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யாருமில்லை (எனக்கு சீர்காழின்னதும் முதல்ல ஞாபகம் வர்றது இது தான்!)


அடுத்ததாக... எப்பேர்ப்பட்ட திட மனதுக்காரர்களையும்.. கண்ணீர் விடச் செய்து விடும் ஒரே பாடல்!


உள்ளத்தில் நல்ல உள்ளம்.. உறங்காதென்பது..


பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய குரல் சீர்காழியோடதுன்னு அலெக்ஸ் சொல்றது.. 100% உண்மை!! அந்தப் பாடலைப் பற்றிய அத்தனை அம்சங்களையும் அழகா விவரிச்சிருப்பார்! போர்க்களம்,என்.டி.ராமா ராவ்! எல்லாத்தையும் கவர் பண்ணிட்டு.. கடைசியா சிவாஜி கணேசனைப் பத்தி சொல்லுவார்! வாவ்வ்வ்வ்!!

வெறும் மூச்சை மட்டும் விட்டு.. நடிகர் திலகம் என்ன மாதிரித் திரையை ஆள்கிறார் என்பதை அவர் சொல்லும் போது.. புல்லரிச்சுப் போகுது நமக்கு!

If you can breath, you can do it!!-ன்னு ஒரே மெசேஜ்-ம் சொல்றார்!

அடுத்து வர்றார் நம்ம ஏரியா பக்கம்! எஸ்.பி.பி, யேசுதாஸ்!!

பாட்டு-ன்றதை வெறும் இசையும்,வார்த்தைகளும் கலந்த ஒரு மூட்டையாகப் பார்க்குற நமக்கு, அந்த வார்த்தைகளுக்குள்ள என்ன மாதிரியான பாவத்தை வெளிப்படுத்த முடியும்ன்றதைக் காட்டுன ஒரே ஆளு எஸ்.பி.பி மட்டும் தான்! ஒரு சின்ன சிரிப்பு (சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது),செல்லச் சிணுங்கல்(விழியிலே மணி விழியிலே), அழுகை(மணியோசை கேட்டு எழுந்து) , ஆரவாரம் (என்னோடு பாட்டு பாடுங்கள்) இன்னும் என்னென்ன உணர்ச்சிகளை.. பாட்டுல பாவங்களாக வெளிக் கொணர முடியுமோ.. அத்தனை மேஜிக்கையும் ஒரு தொகுப்புக்குள்ள கொண்டு வர்ற வித்தை தெரிந்த ஒரே மனிதர்! இனியொரு எஸ்.பி.பி கிடைக்க எத்தனை,எத்தனை ஜென்மங்கள் நாமக் காத்திருக்க வேண்டுமோ தெரியல! அந்த வகைல நாம ரொம்ப ரொம்ப லக்கி!

மன்றம் வந்தத் தென்றலுக்கு...


இந்தப் பாட்டோட தொடங்கி எஸ்.பி.பி-ரஜினிகாந்த் காம்போ-க்கு போறார்! அடுத்து எல்லாம் ஹிலாரியஸ்-ஆ இருக்கு!

டான்ஸ் பண்ணலாம்,ஆனா மூவ்மெண்ட் வேண்டாம்! அதாவது அரசியல்-ல இருக்கோம்,ஆனா எலெக்ஷன் வேண்டாம்ன்னு சொல்றோம்ல அந்த மாதிரின்னு தலைவரையும் விட்டு வைக்கல அலெக்ஸ்!

அதுக்கப்புறம்.. பாடலுக்கிடையில் எஸ்.பி.பி சிரிக்கிற மாதிரி வர்ற பாட்டுக்களை சொல்லுவார்! 


மொட்டுக்கள் மெல்ல.. திறக்கும் போது.. முத்து,முத்து என்கிறது..-ன்னு எஸ்.பி.பி சிணுங்கியபடி பாடினதை சொல்லிக் காட்டுவார்.

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் – பாட்டுல வர்ற விரக்தியான சிரிப்பு!

திருந்தாம போச்சே ஊருசனம் தான்! போற்றி பாடடி பொன்னே!

விழியிலே மணி விழியிலே – பாட்டுல மொத்தமாவே சிரிச்சிட்டே தான் பாடியிருப்பார் எஸ்.பி.பி! அதை அலெக்ஸ் பாடுற விதம் ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்குது!

Whenever SPB sings, thats what always happens
There’s someone out there,tickling him somewhere – ன்னு அதே ட்யூன்ல பாடி முடிப்பார்!


அடுத்ததா.. யேசுதாஸ்!!!!


ஒன் வெரைட்டி ஃபார் எவ்ரிதிங்ன்னு மரண கலாய் அவரை!


அம்மாவை அழைக்காத உயிர் இல்லையே..

கண்ணே கலைமானே..

என் இனிய பொன் நிலாவே..

ஏதோ நினைவுகள்.. கனவுகள்..

ராஜ ராஜ சோழன் நான்!! – ஆடியன்ஸை கண்ட்ரோல் பண்ணவே முடியல! சௌண்ட் அவ்ளோ வந்தது இந்தப் பாட்டுக்கு!

அப்படியே இறங்கி.. ஐயப்பா! ஸ்வாமி ஐயப்பா! –ன்னு பாடி.. அடுத்து..

மாசி மாசம் ஆளான பொன்னு-ன்னு நாட்டி-ஆ இறங்கிடுவார்.


‘தும்ச்சு,தும்ச்சாக்-கெல்லாம் நாம ‘கட்டிப்புடிடா’ சாங்-க்கு அப்புறம் தான் பாடினோம்! பட், ராஜா சார்! அப்பவே இந்த சாங்-ல போட்டுட்டார்!.


ஐயப்பா சாங்-அ பாடுற மாதிரி இந்த கில்மா பாட்டைப் பாடியிருப்பார்ன்னு அலெக்ஸ் கலாய்ச்சது அல்மோஸ்ட் உண்மை தான்! ஆனா.. ஸ்வர்ணலதா வாய்ஸ்.. மயங்கிக் கிறங்க வைச்சு.. பாட்டோட ஃப்ளோல நம்மை இழுத்துட்டுப் போயிடும்!

இந்த ட்யூனை ஐயப்பா சாங் – ஓட மேட்ச் பண்ணி ஓம்,ஓம்,ஓம் போட்றதெல்லாம் செம்ம!!

He is god’s own singer from god’s own country-ன்னு யேசுதாஸைப் பாராட்டி ஃபுல் ஸ்டாப் வைக்குறார்.


அடுத்ததாக.. நம்ம தலைமுறை இசையமைப்பாளர்! தி ஒன் ஒன்லி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!


முதன்முதல்ல ரோஜா வந்ததைப் பற்றி.. கேசட்ல கோரஸ் பாடகர்கள் பெயரைக் கூட மென்ஷன் பண்ணியிருக்கிறதை சொல்லியிருப்பார்!

அரபிக் கடலோரம் பாட்டை அவர் பாடினதை சொல்லும் போது, ரஹ்மான் வாய்ஸை டெண்டுல்கரோட கம்பேர் பண்ணி.. கலாய்ச்சுத் தள்ளிட்டார்!

ஊர்வசி,ஊர்வசி, முக்காலா,முக்காபுலா ஃப்ரம் காதலன் எல்லாம்.. நம்ம ஜெனரேஷன் சாங்-ன்னு I was so excited!!

அடுத்து ஜோதா அக்பர் க்வாஜாஜி சாங் பாடி... ஷோ முடிச்சு வைக்கிறார் அலெக்ஸ்!!

மறுபடி ஹலேலூலா,மாஷா அல்லா,ஹரே ராமா,ஹரே கிருஷ்ணான்னு நல்லை,அல்லை ட்யூன்ல பாடினார்!


Indeed it was a wonderland for all the music lovers!


பெரும்பாலான மக்கள் Stressful ஆன வாழ்க்கை வாழ்ற இந்தக் கால கட்டத்துல, தினம் காலைல நமக்குப் பிடிச்ச பாட்டு கேட்குறதும், பிடிச்ச காமெடி சீன் பார்க்குறதும் நல்ல மைண்ட் ரிலேக்ஸேஷனைக் கொடுக்கும்!

நிஜமா.. ஒரு பாட்டும்,ஒரு சிரிப்பும்.. நம்ம மனநிலையை மொத்தமா புரட்டிப் போடுற வல்லமை கொண்டது! ஏன்னா.. பாட்டைக் கேட்குறது காது மட்டுமில்ல! மூளை,மனசு எல்லாமும் தான்!

ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாடி ஒரு அனுபவம்,ஒரு நினைவு இருக்கும்! அதுக்குள்ள தொலைஞ்சு போய்.. அந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்க்க வைச்சு.. மறந்து போன விசயங்கள் பலவற்றை ஞாபகப்படுத்த வைக்குது! நல்லதோ.. கெட்டதோ! நினைவுகள் எல்லாமே ப்ரஷியஸ் தான்! தங்கப் பெட்டிக்குள்ள சேமிச்சு வைக்க வேண்டிய விஷயம் தான்!

உள்ளக் கிடங்குல கேட்பாரில்லாம கிடக்குற நினைவுகளை.. ஏதோ ஒரு இசை.. தூசி தட்டி எடுத்து பார்க்க வைக்குதுன்னா.. அது ரொம்பப் பெரிய விஷயம் தானே?, சில சமயம் இல்ல.. பல சமயம்.. அந்த நினைவுகளும்,ஞாபகங்களும்.. அடுத்த நாள் நாம வாழப் போற வாழ்க்கைக்கு உந்து சக்தியா கூட அமையலாம்! Who knows!

இப்படியிருக்கிற பட்சத்துல, மியூசிக்கை மையமா வைச்சு நடக்குற ஒரு காமெடி ஷோ! நமக்கு டபுள் ட்ரீட் தானே? ஜாக்பாட் அடிச்சுட்டார் அலெக்ஸ்ன்னு தான் சொல்லுவேன் நான்!!


மக்களே!!

உலகம் வேகமா இயங்குது! எதுக்குமே எனக்கு நேரமில்ல! அப்படி,இப்படின்னு ‘சிவனே’-ன்னு (ஓகே! ஜீஸஸே!, அல்லாவே) சுத்திட்டிருக்கிற உலகத்து மேல பழியைப் போடாதீங்க! ஒரு நாளைக்கு 24 மணி நேரம்ன்றதும், ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிஷம்ன்றதும், ஒரு நிமிஷத்துக்குள்ள 60 வினாடிகள்ன்றதும் எப்பவும் மாறுனதில்ல! இனியும் மாறப் போறதில்ல! உலகம் ஒரே மாதிரி தான் இருக்கு! நம்ம மனசு தான்.. அவசரம்,அவசரம்ன்னு எதையோ நோக்கி விடாம ஓடின மயமா இருக்கு! நமக்கு யாரும் ஸ்டாப் பட்டன் போட மாட்டாங்க! நாமளே நம்மள ஸ்டாப் பண்ணிக்கிட்டாத் தான் உண்டு!

Alex was lucky enough! Profession-ஐ விட்டுட்டு passion-ஐ நோக்கி அவரால move ஆக முடிஞ்சது! அது எல்லாருக்கும் சாத்தியமான்னு தெரியல!
நமக்கு ஸ்டாப் பட்டனை ப்ரஸ் பண்ண பயம் இருக்கலாம்! But we can always pause!

கழுத்தை நெரிக்குற அளவுக்கு ஆஃபிஸ்ல வேலை மலை போல குவிஞ்சு கிடந்தாலும் பரவாயில்லன்னு! எதையும் யோசிக்காம.. லீவ் போட்டு வீட்ல இழுத்துப் போர்த்தித் தூங்கலாம்! என்னைக்காவது ஒரு நாள் நைட் 3 மணி வரை முழிச்சிருந்து நமக்குப் பிடிச்சப் புத்தகத்தை படிக்கலாம், நெட்ல சர்ஃப் பண்ணலாம்! படத்துக்குப் போகலாம், பாட்டு கேட்கலாம், ஐஸ்க்ரீம் சாப்பிடலாம், பீச்ல விளையாடலாம்!

என்ன இல்லை இங்க நாம ரசிச்சு வாழ! சின்ன சின்ன விசயங்களை ரசிக்கத் தொடங்கினா.. வாழ்க்கை அழகாகும்! சந்தோஷம்,நிம்மதியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! வாழ்ற வாழ்க்கை திருப்தியா இருக்கனும்!

Thanks for the wonderful show Alex!! ஒரு complete relaxation-ஆ இருந்தது!! மக்களே! நீங்களும் கண்டிப்பா பாருங்க!!


-நிவேதா.

Wednesday, September 11, 2019

வீரயுகநாயகன் வேள்பாரி! - சு.வெங்கடேசன்


                                     வீரயுகநாயகன் வேள்பாரி!



டந்து போன காலங்களுக்குக் கவர்ச்சி மிகவும் அதிகம்! அதனாலேயோ என்னவோ, சுற்றும் பூமியோடு சேர்ந்து சுற்றியாக வேண்டிய இயல்பை இயற்கையாய்ப் பெற்றிருந்தாலும், மறித்துப் போன மணித்துளிகளின் மீதான மனிதனின் ஆர்வம் என்பது மகுடிக்குக் மயங்காத மலைப்பாம்பாகத் தான் இன்று வரை இருந்து வருகிறது.

எதற்காக இந்த விளக்கம் என்று தோன்றுகிறதா?, பள்ளிப்பருவத்தில், சமூக அறிவியல் புத்தகத்திலிருக்கும் வரலாறு என்ற பகுதியை படித்து முடிக்கப் பாடாய்ப்பட்ட நமக்கு, சரித்திரக் கதைகள் மீதான ஈர்ப்பு  ஏன் வந்ததென்பதை சிந்தித்துப் பார்த்த போது வெளிப்பட்ட வார்த்தைகள் அவை!  

நிற்க! நான் சரித்திரக்கதை என்றதும் பட்டெனப் பொன்னியின் செல்வனை நினைவு கூரும் ஆர்வலர்கள் சற்றுப் பொறுக்கவும்! ஏனெனில், நாம் பேசப் போவது சேர,சோழ,பாண்டியனின் வீரத்தைப் பற்றியல்ல! அம்மூவேந்தர்களையும் மூஞ்சுறுக்களாய் ஓட விட்டப் பாரியைப் பற்றி! பறம்பு மலையின் தலைவன் வேள்பாரியைப் பற்றி!

கதை: வீரயுக நாயகன் வேள்பாரி – சு.வெங்கடேசன்.



இது விமர்சனம் அல்ல. விமர்சிப்பதற்கு இது கதை அல்ல! அனுபவம்! இல்லை,இல்லை! அனுபவத்தைத் தாண்டிய ஓர் உணர்வு! கடுங்குளிருடன் தொடங்கிய காலை வேளையொன்றில்.. மேகத்தைக் கிழித்தெறிந்து கொண்டு சூடாய்க் கரம் நீட்டும் கதிரவனின் முதல் வெப்பத்தை உச்சி முதல் பாதம் வரைக் கண் மூடி உள் வாங்கும் போது உண்டாகும் சுக அலையை அனுபவம் என்றா பெயரிடுவோம்?, இல்லை! அது உணர்ச்சிகளின் குவியல்! அது போலத் தான் வேள்பாரியுடனான நம் பயணமும்!

அக்குவியலுக்குள் மூழ்கி வெளி வர மனமில்லாது திணறிக் கிடந்ததன் விளைவு.. இப்போது.. தாய்த்தமிழின் உயிரும்,மெய்யும் என் விரல்களுக்கிடையே விளையாடியபடி பாரி,பாரியெனப் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது! இது... எனக்கான நினைவூட்டல் மட்டுமே! பரிமாறப்பட்ட இலை காலியாகாமலேயே அறுசுவையையும் என் நாக்கு எப்படி ருசி பார்த்ததென்பதை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சி!

இக்கதை முடிவில் வரும் பனையன் மகனே பாடலைப் பாடும் பாணர் கூட்டத்தில் நிற்கும் ஒருவராய் பாரியின் புகழ் பாடுவது மட்டுமே நம் நோக்கம்! ஏனெனில் அவனை விமர்சிக்க முடியாது. வியந்து பார்க்கத் தான் முடியும்!


ந்திணைகளில் ஒன்றான குறிஞ்சி நிலம் அது! இயற்கையின் அற்புதம்! வேடர் குலத்து முருகனும்,கொடிக்குலத்து வள்ளியும் காதல் கொண்டு மயங்கிக் கவி பாடித் திரிந்த மிக நீண்ட மலைத்தொடர்! தவறும்,தண்டனையும்,பொய்யும்,புரட்டும், சூதும்,சூட்சமும் சற்றும் அண்டியிராத உன்னத இடம்! அரசனோ,அரசியோ ஆளாது.. குலத்தலைவன் ஒருவனால் தனித்த நெறிமுறைகளோடு பேணிக் காக்கப்பட்டு வரும் சுதந்திர பூமி!  பெயர் பறம்பு நாடு!

அப்பேர்ப்பட்ட சிறப்பு மிக்கப் பறம்பு நாட்டை இப்போது ஆண்டு வரும் தலைவன் தான் பெருவள்ளல் வேள்பாரி! எவ்வியின் வழித்தோன்றல்!!  மன்னர்களின் புகழைப் பாட்டாகப் பாடியபடித் தமிழ்நிலம் முழுதும் சுற்றி வரும் ‘பாணர்’ என்ற இனத்தவரின் வழியாக மட்டுமே பாரியைப் பற்றிக் கேட்டறிந்திருந்த மூவேந்தர்கள், முப்பெரும் அரசரர்களாகியத் தங்களையும் மீறிப் பாரியின் புகழ் ஓங்கியிருப்பதைக் கண்டு அவன் மீது தீராப்பகையை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனாலும் அவனை எதிர்த்து அவர்களால் எதையும் செய்து விட முடியவில்லை! அணுக முடியாத பறம்பின் நிலவியல் அமைப்பையும், பாரியின் படைவலிமையையும்,சமயோசித புத்தியையும் எந்தவகையிலும் தோற்கடிக்க முடியாமல் திணறும் பேரரசர்கள் மூவரும் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர்.

அந்த சமயத்தில் தான் பெரும்புலவர் கபிலர் பாரியைச் சந்திக்க வேண்டி பறம்பு நாட்டுக்கு வருகிறார்! பாணர் கூட்டத்தின் வழியாக மட்டுமே பறம்பையும்,பாரியையும் அறிந்து வைத்திருந்தவர், ‘அப்படி என்ன இருக்கிறது அவனிடத்தில்!’ என்கிற எள்ளலான மனநிலையுடன் தள்ளாத வயதிலும் தன்னந்தனியாக மலை ஏறுகிறார்.
தள்ளாடிபடி ஏறுபவரைத் தாண்டி முழு வேகத்தில் செல்கிறான் ஒருவன். அவனிடம் பறம்பு மலைக்குச் செல்ல வழி கேட்கிறார் கபிலர்.

“நான் நீலன்” என்றுத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவன் “யார் நீங்கள்?” என்கிற கேள்வியோடு தொடங்குகிறான். அடுத்து அவனுடனான பேச்சு வார்த்தை முழுவதும் கபிலரை வாயடைத்துப் போக வைக்கிறது.

“பாரி தான் பறம்பு நாட்டை ஆள்கிறானா?” என்று அவர் கேள்வி கேட்க.. “அவன் அரசன் அல்ல. தலைவன்.” என்றவனின் பேச்சு ஒரு கட்டத்தில் பாண்டிய மன்னனையும்,வயல் நண்டின் கண்களையும் நோக்கிச் செல்கிறது.

 வயல்நண்டின் கண்களுக்கும்,கடல் நண்டின் கண்களுக்கும் வித்தியாசம் கேட்கும் கபிலரிடம் “நான் கடல் பார்த்ததில்லை” என்கிறான் நீலன்.

“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கடல் பார்க்க வேண்டும்”-என்கிறார் கபிலர்.

“ஏன்?” என்ற நீலனிடம் “அது அவ்வளவு பரந்து விரிந்தது. அளவற்றது” என்கிறார்.

அவரை விட்டு இரண்டடி முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் நீலன் நின்று.. திரும்பி.. அவர் முகம் பார்த்து..

“எங்கள் பாரியின் கருணையை விடவா?” என்கிறான்.

சொற்போரில் வல்லவரான கபிலர் அவன் கேள்வியில் திகைத்து வாயடைத்துப் போய் நிற்கிறார்.

நீலன் மற்றும் கபிலருக்கிடையேயான பேச்சு தொடர்ந்து முருகன்-வள்ளியின் காதலை நோக்கி நீள்கிறது. விளை நிலத்தில் நுழைந்த பன்றிக் கூட்டத்தை விரட்டிச் செல்லும் முருகன், வள்ளியை முதன் முதலில் கண்டதையும் காதல் கொண்டதையும் கதையாய்ச் சொல்கிறான் நீலன்.

பெண் தொட்டுத் தழுவினால் மலரும் ஏழிலைப் பாலை மரத்தைப் பற்றியும், சோமப் பூண்டைப் பற்றியும் நான் அறிந்து கொண்டது இதுவே முதன்முறை!

தனக்காகப் பரண் அமைத்துக் கொடுத்தத் தன் நண்பன் எவ்விக்கு சோமப் பூண்டைப் பரிசளிக்கிறான் முருகன். தண்ணீருக்குள் அப்பூண்டை இட்டால், பழச்சாறு போல பொங்கி வருமாம்! பானை,பானையாகப் பறம்பு மக்கள் அருந்துவதைப் படிக்கையிலேயே நம் தொண்டையும் நனைந்து போய் விடும்!

ஊரின் பெருங்கிழவரான பழையன் என்பவர், கூடை நிறைய நாவல் பழத்தை சுவைக்கக் கொடுத்துக் காட்டைப் பற்றியக் கபிலரின் அறிவை சோதிக்கும் இடமெல்லாம் நிச்சயம் நம் கைத்தட்டலை வாங்கி விடும்!

அன்றிரவு புலிவால் குகையில் தங்கும் கபிலர், காலையில் கண் விழிக்கும் போது.. அவரருகேயிருந்த பாறையில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்! அவர் எழுந்ததும் அவன் முன்னோக்கி நடந்து வருகிறான்.

முழு சூரியனையும் முதுகுக்குப் பின்னே அடைத்துக் கொண்டு கம்பீர நடை போட்டு அவரருகே வந்தவன் “உடல் முழுதும் காயத்தோடு இருக்கிறீர்களே, எவ்வியூர் வரை உங்களை நான் தூக்கிச் செல்லவா எனப் பணிவுடன் கேட்கிறான்”

“நீங்கள் யார்?” எனக் கேட்டக் கபிலரிடம்..

“வேள்பாரி” என்றான்.

பொன்னியின் செல்வனில், வந்தியத்தேவனோடு சண்டையிட்ட யானைப்பாகன் தான் அருள்மொழி வர்மன் என்று தெரிய வருகையில் எப்படி மனது கும்மாளமிட்டதோ, அதே உணர்வு தான் எனக்குப் பாரியைக் காணும் போதும்!

சேரனும்,சோழனும்,பாண்டியனும் பறம்பு நாட்டிலிருக்கும் ஒவ்வொரு அற்புதப் பொருட்களின் பின்னேயும் எப்படி நாயாய் அலைகிறார்கள் என்பதைக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் புரிந்து கொள்ளலாம்!

அற்புதமோ,ஆச்சரியமோ.. இந்த மலையிலிருந்து மண்ணை எடுத்துச் செல்லக் கூட நான் அனுமதிக்க மாட்டேன் என்பது பாரியின் எண்ணம்! அது அவர்களது குல வழக்கமும் கூட! இயற்கை கொடுக்கிறது! நாம் வாழ்கிறோம்! இதை விற்கவும்,வாங்கவும் நாம் யார்?-என்கிறான். முத்தையும்,மிளகையும் யவனர்களிடம் வணிகம் செய்து லாபம் பார்ப்பது போல், பாரியின் பறம்பு மலையில் கிடைக்கும் எத்தனையோ அரிய பொருட்களை வணிகத்தில் ஈடுபடுத்தி வேண்டுமென்று மூவேந்தர்களும் முனைப்பாய் இருந்திருக்கின்றனர்.

அதில் முதலாய் நாம் அறிந்து கொள்வது கொல்லிக்காட்டு விதையைப் பற்றி! அந்த விதையில் சிறு பகுதியைத் தின்றாலே மீன்களும்,பறவைகளும் மயக்கமடைந்து விடும்!

பாணர் கூட்டமொன்று சேரனின் மிரட்டலால் பாரியிடமிருந்துக் கொடையாக கொல்லிக்காட்டு விதையை பை நிறைய கொண்டு செல்கின்றனர். 

கொல்லிக்காட்டு விதையைக் கையில் வாங்கியதும் யவனர்களிடம் விலை பேசுகிறான் சேரன். வணிகத்தை விரிவு படுத்தப் பாரியிடம் கலந்தாலோசிக்க கோளூர் சாத்தான் எனும் சேர நாட்டு அமைச்சர் பாரியைக் காண வருகிறார்.

வணிகத்தை ஆதரிக்காத பாரி அவரைத் திருப்பி அனுப்பி வருகிறான்.
கோளூர் சாத்தானுடன் பறம்பின் எல்லைக் காவல் வீரனாகிய முடியன் என்பவன் உடன் வருகிறான்.

“எந்தப் பொருளுக்கு வணிகம் பேச வந்திருக்கிறீர்கள் எனக் கேட்ட முடியனிடம் கொல்லிக்காட்டு விதையைக் காட்டுகிறார் கோளூர் சாத்தான்.

பாணர்களிடமிருந்து அவன் கொல்லிக்காட்டு விதையை பெற்றிருக்கிறான் என்றறிந்து கொண்ட முடியன், அனைவரின் வலது கையையும் வெட்டி அங்கிருந்தப் பனை மரத்தில் தொங்க விடுகிறான்!
வணிகம் பேச வருபவன் எவனும் வலது கையோடு போக முடியாது!!

குருதி பெருக ஓடுபவர்களைக் கண்டபடியே முடியன் அவர்களது கைகளை மரத்தில் கட்டும் காட்சி! அப்ப்பாஆஆஆஆ! க்ளாப்ஸ்!! க்ளாப்ஸ்!!

உச்சிப் பாறையில் நின்று சூரியனின் ஒளி வாளை கபிலரும்,பாரியும் காணும் காட்சி நம்மையும் மெய் சிலிர்க்க வைக்கும்! பாழி நகரைப் பற்றி பாரி விவரிக்கும் போது.. நமக்கும் ஆச்சரியம் ஏற்படும்!

அதன் பிறகு வரும் கொற்றவை விழா! அழிந்து போன இனத்தின் வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் தங்களது குலப் பெருமையைப் பாடி.. ஆவேசம் கொண்டு ஆட்டமாடுவதை.. தத்ரூபமாக நம்மால் பார்க்க முடியும்! இந்த இடத்தில் வரும் தெய்வ வாக்கு விலங்கு (தேவாங்கு) கதையின் போக்கை முற்றிலுமாகக் கட்டி இழுத்துச் செல்லப் போகிறதென்பதை நாம் போக,போகப் புரிந்து கொள்வோம்!

இந்த அத்தியாயத்தில் பாரி பேசும் ஒவ்வொரு வசனமும் நம்மிடம் கைத்தட்டல்கள் வாங்கும்!

முதன்முதலில் நீலனைக் கண்ட கபிலர் அவனிடம் பறம்பின் குலப் பாடலைப் பாட சொல்லிக் கேட்டிருப்பார். அவன் நான் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனல்ல, என்னால் பாட முடியாது எனக் கூறி மறுத்திருப்பான்.

கொற்றவை விழாவில் அவன் அகுதையின் குலத் தோன்றல் என்பதை அறிந்து கொள்ளும் கபிலர், பாரியிடம் நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயார் என்பார். அதற்குப் பாரி..

“பறம்பில் தண்டனை கிடையாது” என்பான் தொடர்ந்து “ஒருவகையில் அதுதான் கொடும் தண்டனை” என்பான்.  சத்தியமான வார்த்தையில்லையா அது!

தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டு நடக்கையில் எதிர்ப்படும் செந்நாயை ஈட்டி எறிந்து கொல்கிறான் பாரி. திகைத்து நிற்கும் கபிலரிடம் “கண்ணில் படும் விலங்குகளனைத்தையும் கொன்று குவிக்கும் குணம் கொண்ட ஒரே விலங்கு இது மட்டும் தான். கண்ணில் படும் நாடுகளையெல்லாம் சொந்தமாக்காத் துடிக்கும் வேந்தர்களைப் போல” என்று கூறி விட்டு “காட்டின் அழிவு சக்தி இந்த செந்நாய். அழிவுசக்திகளை எங்கு கண்டாலும் பறம்பின் ஈட்டி பாயும்” என்பான்.

ஆவேசத்துடன் அவன் அதை உச்சரிக்கும் போது.. காற்றைக் கிழித்துக் கொண்டுப் பாயும் ஈட்டியின் ஓசை நம் காதிலும் ஒலித்து நடுங்கச் செய்யும்!

அடுத்து செம்பா தேவியின் கதையும்,வெண் சாந்து உருண்டையும், பறவையின் அலகுகளால் குத்தப்பட்டு துடி,துடித்துச் சாகும் இளவரசன் கிள்ளியைப் பற்றியும் திகிலுடன் படித்து நகர்வோம்!

அடுத்து நாகர்களின் கதையைப் பற்றியும், தீக்களியைப் பற்றியும் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்டோம்!

சரித்திரக் கதையென்றாலே நிறைய கிளைக் கதைகளைத் தாராளமாக எதிர்பார்க்கலாம்! ஆனால்.. அந்தக் கிளை கதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் இருக்கும்! இந்தக் கதையும் அப்படித் தான்!

பாரியின் மனைவி ஆதினி, மகள்கள் அங்கவை,சங்கவை! அங்கவையின் காதலனும், கபிலரின் சேவகனும், வில் வித்தை வீரனுமான உதிரன்! ஆகியோரோடு கதை நகரும்!

அடுத்ததாக குலசேகர பாண்டியனின் மகன் பொதியவெற்பனின் திருமண வைபவம்! பெருவணிகனின் மகள் பொற்சுவையை மணம் புரிகிறான் அவன். காதல் கொண்டு அல்ல! முற்றிலும் வணிக நோக்கத்துடன்! இத்திருமணம் கதையின் போக்கிற்கும்,அடுத்து நடக்கப் போகும் சம்பவங்களுக்கும் காரணமாக அமைகிறது!

இத்திருமணத்திற்கு புதுவிதமான பரிசொன்றைக் கொடுத்து அரசரை மகிழ்விக்க வேண்டுமென்று நினைக்கிறார் பாண்டிய நாட்டின் சிற்றரசர்களில் ஒருவரான மையூர்கிழார். அவருக்கு இளமருதன் எனும் மகன் இருக்கிறான்!

ஒரு வழியாக மூளையைக் கசக்கி அவையோரோடு சேர்ந்து காமன் விளக்கொன்றை செய்யும் முடிவுக்கு வருகிறார்.

இதற்கிடையில் அவரது கையில் கிடைக்கிறது தெய்வ வாக்கு விலங்கு! பறம்பு நாட்டில் குறி சொல்லும் விலங்கு அது என்பதைத் தெரிந்து கொண்டு, உடனே அந்த விலங்குகளை தன் மகன் கையில் கொடுத்தனுப்புகிறார் மையூர்கிழார். எவ்வகையிலேனும் அரசனை ஈர்த்து விட வேண்டுமென்பது அவர் நோக்கம்.

இந்நிலையில் திருமணத் தம்பதிகள் தங்க வேண்டி பாண்டரங்கம் என்றொரு மாளிகை தயாராகிக் கொண்டிருந்தது. அங்கிருக்கும் பள்ளியறையின் மேற்கூரை தம்பதிகள் பிறந்த கிரக நிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கார்காலத்திற்கு ஒன்று,இளவேனிலுக்கு ஒன்று, பனிக்காலத்துக்கு ஒன்று என மொத்தம் 3 பள்ளியறைகள்!  மேற்கூரையை ஓவியமாக வரையும் பணிக்கு தலைமை ஏற்றிருப்பவன் அந்துவன்! பெருங்கணியர் திசைவேழரின் தலைமை மாணவன்!

அந்துவன்  செய்த மேற்கூரைப் பணியை மேற்பார்வையிட வரும் திசைவேழர், அவன் செய்த வேலையைக்குறை சொல்லி முற்றிலுமாக ஓவியத்தை அழித்து மாற்றும்படி உத்தரவிட்டுச் செல்கிறார்.
கடுப்பில் வேலை பார்ப்பவன், அந்த மாளிகையின் ஓரத்தில் இளமருதனால் வைத்துச் செல்லப்பட்டிருந்த கூண்டுக்குள் அடைபட்டிருந்த தேவாங்குகளைக் கவனிக்கிறான்.

குச்சி வைத்து அதனை அடித்து விளையாடுபவன் ஒரு கட்டத்தில் மாபெரும் விசயத்தைக் கண்டறிகிறான்.

அதாவது எந்தப் பக்கம் ஓடினாலும், சரியாக வடதிசையில் மட்டுமே அமர்ந்தது அக்குரங்கு. கூண்டைத் திறந்து ஓட விட்டு அமரச் செய்தாலும், வடதிசையில் மட்டுமே அமர்ந்தது.

உடனே விசயம் மன்னனை அடைந்தது. தேவாங்குக் குரங்குகளை நேரில் கண்ட மன்னர் பூரித்துப் போகிறார்.

ஏனெனில் அக்காலத்தில் கடல் வணிகத்தில் திசை கண்டறிவதென்பது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. தேவாங்கு குரங்கை திசை காட்டியாக பயன்படுத்தத் தொடங்கினால் தங்களது கடல் வாணிபம் பெருகும் எனக் கணக்கிடும் குலசேகர பாண்டியன் பாரியிடமிருந்து தேவாங்கு குரங்குகளைக் களவாடத் திட்டமிடுகிறான்.

இங்கே பறம்பு நாட்டில், இளைஞர்கள்,சிறுவர்களைக் காடறிய அழைத்துச் செல்கிறார் தேக்கன். அவர் பறம்பின் ஆசான்!!! குறிஞ்சிப் பூ பூக்கும் ஒவ்வொரு முறையும் அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை காடறியும் பயிற்சியை தம் பறம்பு நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவார் தேக்கன். மிகக் கடுமையான பயிற்சி அது!

அடுத்து வரும் காட்சிகளனைத்தும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும்!

ஏனெனில் பாண்டிய மன்னன் தங்களது அடிமைக் குலங்களில் ஒன்றான திரையர் குலத்தைச் சேர்ந்த சிலரை தேவாங்கு வேட்டைக்கு அனுப்பியிருப்பார்.

பயிற்சிக்காக செல்லும் இளைஞர்களை கொற்றவை மரத்தின் முன்னே பூஜைக்காகத் தேக்கன் அழைத்து வந்திருந்த போது.. மரத்தினுள்ளே தெரியும் மனிதர்களைக் கண்டு கொள்வார்.

அங்கிருந்துத் தொடங்கும் காட்சிகள் இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது!

திரையர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல! ராட்சசர்கள்! வெற்றிலையைக் கண்டறிந்தவர்கள்! யாராலும் அடக்க முடியாத காட்டு எருமைகளை அசாதாரணமாக வீழ்த்துபவர்கள்! ஒவ்வொருவரும் ஏழடி உயரமும், நான்கடி அகலமும் கொண்ட பராக்கிரமசாலிகள்! பறம்பு மக்களுக்கு நிகராக காட்டைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள்!

தேக்கன் தன்னோடிருக்கும் சிறுவர்களைக் கொண்டு அவர்களை எதிர்க்கத் தயாராகிறான். திட்டமிட்டுத் தேக்கன் நடத்தும் தாக்குதலுக்கு, ஒரே அடியில் எதிர் தாக்குதலை நடத்தி தேக்கனின் கையை உடைத்துச் செல்லும் திரையர்களின் வலிமை... படிக்கும் போதே நம்மை நிலை குலையச் செல்லும்!

தேக்கன் என்பவன் பறம்பின் மாவீரன்! கிழவன் தான்! ஆனால்.. அவனுக்குள்ளிருக்கும் உறுதி அப்ப்பாஆஆஆஆஆ! ஓட்டம்,ஓட்டம்,வீரம்,வீரம் மட்டும் தான்! நாக்குக் கசப்போடு பேச முடியாமல் துடிக்கும் மாணவர்களின் ஓட்டம்.. நம் கால்களை நடுங்கச் செய்யும்!

திரையர்களை எதிர்க்க முடியாமல் பாரிக்கு செய்தி சொல்லி அனுப்புகிறான் தேக்கன்!

வாய் திறந்து எதையும் சொல்ல முடியாமல், விடாத ஓட்டத்தோடு பாரியை அழைத்துக் கொண்டு செல்லும் மாணவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வேகங்கொள்ளச் செய்யும்!

காட்டைப் பற்றிய பறம்பு மக்களோட அறிவு என்பது நம் கற்பனையைத் தாண்டியது! காலுக்கடியில் செல்லும் வண்டைக் கூட தங்களின் யுத்தத்துக்கான யுத்தியாக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியாது!

எடுத்துக்காட்டாக,
அடிபட்டுக்கிடந்தத் தேக்கனையும், தூரத்தில் கூடை,கூடையாக தேவாங்குக் குரங்குகளை அள்ளிக் கொண்டு ஓடும் கூட்டத்தையும் காணும் பாரி, கண்கள் பார்த்த செய்தி மூளையைச் சென்றடையும் முன்னே முழு வெறியுடன் விறு,விறுவென எதிரியின் பின்னே ஓடத் துவங்குகிறான்.

புலியை ஒத்தது அவனது ஓட்டம்! நாலு கால் பாய்ச்சல் தான்! ஓடும் போதே கால்குலேஷன் ஓடுது அவன் மண்டைக்குள்ள! வந்திருக்கிறவன், தேக்கனை அடித்து வீழ்த்துமளவிற்கு வீரமானவன்! ஓட்டத்தில் பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பவன்! ஒவ்வொரு மலையைக் கடக்கும் போதும், அவர்களுடைய எண்ணிக்கை பெருகுகிறது, அடுத்து.. இப்போதைக்குக் நம்ம கையில் ஆயுதம் எதுவுமில்லை! பாரியின் பின்னே படையும் இல்லை!

இதையெல்லாம் யோசிச்சு மேனிபுலேட் பண்ணிட்றான்! எந்த மாதிரியான தாக்குதலா இருக்கனும் தன்னோடதுன்னு!

காட்டோடையைக் கடந்து ஒரு இடத்துல நின்னு மூச்சு வாங்குறான்! காலுக்குக் கீழே பார்க்குறான்! அனுவல்லிப் பூண்டு விளைஞ்சு கிடக்குது! கைண்ட் ஆஃப் ட்ரக் அது! 4 இலையைப் பறிச்சுத் தின்னா.. வெறி அதிகரிக்கும்! அப்படியே, தனக்கு முன்னால இருக்குற பாறை பின்னாடி லேசா முனகல் சத்தம் வர்றதைப் பார்க்குறான்!

சுண்டாப் பூனை 2 ஜல்சா பண்ணிட்டு இருக்குது! பொறுமையா அதைப் பார்த்துக்கிட்டே 4 இலையை மென்று தின்னுகிறான்! பூனை ஜல்சாவை முடிக்க, இவனும் இலையை முழுங்கி முடிக்க.. இது தான் நேரம்ன்னு, பட்டுன்னு காலுக்கடில இருக்குற கல்லை பூனை மேல எத்தி விட்றான்!
பொதுவா ஜல்சா முடிஞ்சதும் படு பசியில இருக்குமாம் சுண்டாப் பூனை! 

பொறுமையா அது.. முக்கி,முனகி எழுந்து வேட்டையாடப் போகுமாம்! ஆனா... பாரி இடைல கல்லை விட்டு எறிஞ்சதுல வெறியேறிப் போய் அவன் மேல பாய வருது!

அது பாயுற நேரம் பார்த்துத் திடுதிடுன்னு நம்மாளு வெறி பிடிச்சுப் போய் ஓட்றான்! எதிரிக் கூட்டம் பக்கத்துல போற வரைக்கும் பயங்கரமா ஓடி, கூட்டத்துக்குக் கிட்ட வந்ததும், சைட்-க்கா ஓடிடுறான்! பின்னாடி வந்தக் சுண்டாப்பூனை ரெண்டும் இவனை விட்டுட்டு கூட்டத்து மேல பாய்ஞ்சுடுது! எப்டியும், ஒருத்தனை விட்டு வைக்காதுன்ற நினைப்புல, இவன் பாறைக்குப் பின்னால ரெஸ்ட் எடுக்க உட்கார்ந்துட்றான்!

சத்தம் குறைஞ்சப்புறம் பொறுமையா பாரி எழுந்து பார்க்கும் போது, ஒரே ரத்த வெள்ளமா இருக்கு! ஆவேசமா வந்த சுண்டாப்பூனைக் கிட்டயிருந்தும் தப்பிச்சு 3 பேர் கூடையோட தூரத்துல போய்ட்டிருக்கிறதை ஆச்சரியமா பார்க்குறான்!

தேக்கன்,பாரி ரெண்டு பேராலேயும் அவனுங்களை ஒன்னும் பண்ண முடியல!

இப்போ தேக்கன்,பழையன்,பாரி 3 பேரும் சேர்ந்து அவங்களை எப்படி வீழ்த்துறதுன்னு ப்ளான் போடுறாங்க!

காட்டில் கிடைக்கிற செடி,கொடிகளை வைத்து அவர்கள் செய்யும் ஆயுதம்.. நோ வேர்ட்ஸ் டூ ஸே! காட்டைப் பத்தின அறிவை வளர்த்துக் கொள்ளச் சொல்லி நம்மையும் தூண்டுகிறது.

ப்ளான் போட்டபடி தாக்குதல் நடத்துறாங்க!

கடைசியாக அந்தக் கூட்டத்தோட தலைவனான காலம்பன் என்பவனும் பாரியும் எதிரெதிரில் நிற்கிறார்கள். இந்த விலங்கை எடுத்துச் செல்ல எத்தனை இழப்புகள்ன்னு காலம்பன் வெறியோட நிற்குறான்! என் மண்ணுல இருந்து எனக்கு சொந்தமானதை நீ எடுத்துட்டு போய்டுவியான்னு கோபத்துல பாரி நிற்குறான்!

ரெண்டு காட்டெருமைங்க சண்டை போட்டுக்கிற மாதிரி ரெண்டு பேரும் மோதிக்கிறாங்க! பாரி கையில ஆயுதம் எதுவுமில்லைன்றதைத் தெரிஞ்சு தேக்கன் “பாரி... அவனருகில் செல்லாதே!, அவன் குத்துக்கோல் மறைத்துள்ளான்”-அப்டின்னு கத்துறார்.

கிழவன் “பாரி”-ன்னு சொன்னதும் ஆடிப் போய் நிற்குறான் காலம்பன்!

எதிரில் நிற்பவன் பார் போற்றும் பாரி என்பதையறிந்து கொண்ட நொடி, கால்கள் தன்னாலேயே முட்டியிட்டுச் சரிய, கைகளிரெண்டையும் பாரியை நோக்கிக் கூப்பியபடி கண்ணீர் வழிய நிற்கிறான்!

காலம்பன் திரையர் குலத்தைச் சேர்ந்தவன்! திரையர் குலத் தலைவன்!இவர்களை எதிர்த்துப் போரிட்ட சோழர்களை ஓட விட்ட வீரப்பெருமக்கள்! ஆனாலும், சோழனும்,பாண்டியனும் கை கோர்த்து சதி செய்து திரையர் இனத்தவரை அழித்து அடிமையாக்கியிருக்கிறார்கள்.

பறம்பு மலையேறி தேவாங்கைக் களவாடி வர, காடறிவு பெற்ற யாரேனும் தான் சென்றாக வேண்டுமென பாண்டிய அவையில் பேச்சு வந்த போது, திரையர்களை கைக்காட்டுகிறான் பாண்டியர்களின் தலைமைத் தளபதியான கருங்கைவாணன்.

உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறேன்! ஆனால் அதற்குப் பதிலாக எனக்கு தேவாங்கைக் களவாடி வரவேண்டுமெனக் காலம்பனிடம் கேட்கிறான் கருங்கைவாணன்!

இந்தக்கதை முழுதையும் பாரியிடம் ஒப்பிக்கிறான் காலம்பன்! தன் இனத்துக்காக இவ்வேலையைச் செய்யத் துணிந்தவனை எண்ணி பெருமை கொண்டு அவனுடன் 40 குரங்குகளையும், கூடவே தன் வீரர்கள் சிலரையும் துணைக்கு அனுப்புகிறான் பாரி! எதற்காகப் பாண்டியன் தேவாங்கின் பின்னே அலைகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

அதன் பின் திரையர் கூட்டத்தோடு கலக்கும் பறம்பு வீரர்கள் (அதில் நீலனும் அடக்கம்), யவனர்களின் கப்பல்கள் அனைத்தையும் தீயில் கொளுத்தி விட்டு திரையர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பறம்புக்கு அழைத்து வருகிறார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய இடம், பறம்பின் மாவீரன் நீலன், மையூர்கிழாரின் மகன் இளமருதனின் தலையை வெட்டியது தான்!

யவனர்களின் கப்பல்கள் அனைத்தும் வைகைக்கரையில் எரிந்து போனதிலிருந்து யவனர்களும்,பாண்டியர்களும் பாரியின் மீது கடுங்கோபத்திலிருக்கிறார்கள். போர் தொடுத்து பாரியை வீழ்த்த சமயம் பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

வெற்றி பெற்று பறம்பு மலையேறும் வீரர்களை ஊரே கொண்டாடுகிறது!

எப்போதாவது ஒருமுறை தான் காட்டில் சோமப்பூண்டைக் கண்டறிவார்கள் பறம்பு மக்கள்! அன்று பார்த்து சோமப்பூண்டு கிடைத்த மகிழ்ச்சியில் ஊரே திண்டாடுகிறது. சோமபானத்தைக் குடித்துக் குடித்து நிறைய கதை கேட்கிறார் கபிலர்.

ஆதினி-பாரியின் சந்திப்பும்,திருமணமும் இதிலொரு கதையாக வருகிறது. நிலவொளியில் பறந்து வரும் சிறகு நாவல் பழம், கருங்குகை ஒன்றில் வெண் சாரைகளின் ஒளி வழியே இருவரும் இணையும் தருணம் என இந்தப் பகுதி முழுவதும் காதல் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கிறது. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்கிற வாக்கியம் ஏன் வந்ததென்பதற்கான விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும்!

தன் கப்பலிலொன்றை தீக்கிரையாக்கி விட்டிருந்த யவனப் பெரு வணிகன் ஒருவன் சேரனை சந்திக்கிறான். அனைவரும் இணைந்தாலொழிய பாரியை வீழ்த்த முடியாதென்கிற முடிவுக்கு வருகிறார்கள்!

சேரன் ஒரு வித்தியாசமான யுத்த யுக்தியைப் பயன்படுத்துகிறான்! எங்கிருந்தோ ஒரு தீவிலிருந்து தோகை நாயை வரவழைக்கிறான்! பாரியின் குதிரைப்படை பலத்தை வீழ்த்துவதற்காக! ஒரு குதிரையை இந்தத் தோகை நாய் கடித்தால் போதும், அந்தக் குருதி வாடையை நுகர்ந்து கொண்டு கடைசி வரை சென்று தாக்கும்!

 இதற்கிடையில் சோழன் வேறு பெரும் படையொன்றை பறம்பின் எல்லையில் நிறுத்தி வைக்கிறான்! மேற்கூரிய இருவரைப் போலல்லாது சோழனுடைய நோக்கம் பாழிநகர்! பொன்னும்,பொருளும் கொட்டிக் கிடக்கும் புதையலிருக்கும் இடம்!

சேரனும்,சோழனும் ஒன்றிணைகிறார்கள்!

பின் மயிலா-நீலன் திருமணம் நடக்கிறது! மணமகன்,மணமகளை தூக்கிச் செல்வதும்,அவள் செய்யும் சேட்டையும் ரசிக்கும்படியாக இருந்தது.

தன் நண்பனின் திருமணத்துக்கு கிளிமூக்கு மாங்கனியை பரிசளிக்க எண்ணித் தன் காதலி அங்கவையுடன் காட்டுக்குள் அலையும் உதிரனை அடவி ஈ கடித்து விட, அவன் மயக்கமடைகிறான். செய்வதறியாது அங்கவை தவிக்கும் வேளையில் பெரும் யானைப்படையொன்று அவர்களை நோக்கி வருகிறது. உதிரனைக் கயிற்றில் கட்டி படாதபட்டு மரத்தில் ஏற்றி.. அவளும் ஒளிந்து கொண்டு.. தன்னைக் கடந்து செல்லும் பெரும் கூட்டத்தை அவள் உற்று கவனிக்கும் காட்சி சபாஆஆஆஆஷ்!!!! போட வைக்கிறது! வந்திருப்பது சோழனின் படையொன்று!

அவர்கள் நகர்ந்ததும் உடனே தந்தைக்கு செய்தி அனுப்புகிறாள் அங்கவை! ஊர் பரபரப்பாகிறது! யுக்திகள் தயாராகின்றன!

இங்கே இரவாதன் என்றொருவருவனின் அறிமுகம் கிடைக்கிறது நமக்கு! மாசற்ற சுத்த வீரன் அவன்! குதிரைப்படையின் தலைவன்! கடைசிப் போரில் அவனது வீரம் நம்மை கதி கலங்க வைத்து கண் கலங்க வைக்கப் போகிறது!

ஒவ்வொரு விசயமும் ஆராயப்படும்! யானைகளோட தோற்றத்தை வைத்து வயதைக் கணிப்பாங்க! அந்த வயதுடைய யானை என்ன மாதிரியான தாக்குதல் நடத்தும்ன்னு சொல்லுவாங்க! 7 நாளைக்கு மேல நடந்தும் காலாட்படை வீரர்கள் சோர்வடையாம வர்றதையும், இந்த வெயில்காலத்துலயும் இந்த மலை-ல சரியான இடத்துல கிணறு தோண்டி யானைக்குத் தண்ணீர் எடுப்பதையும் விவரிப்பாங்க! காட்டைப் பற்றிய அறிவு பெற்றவனால மட்டும் தான் இதையெல்லாம் செய்ய முடியும்ன்னு முடிவுக்கு வருவாங்க!

எந்த இடத்துல எப்படித் தாக்கனும்ன்னு தீர்மானம் பண்ணி எதிரிகளைத் தொடர ஆரம்பிப்பாங்க! மலை முகட்டில் நின்றபடி எதிரிகளைக் கவனித்தபடி தொடர்வான் பாரி.

சேரன் தனது தோகை நாய்களைக் கொண்டு முதலில் தாக்குகிறான்! இது எந்த மாதிரியான மிருகம் என்றறியாமல் திகைத்துப் போகும் பறம்புப் படை, எதிர்த்தாக்குதல் நடத்த முடியாமல் திணறுகிறது.

இங்க ஒரு டயலாக் வரும். எனக்கு ரொம்பப் பிடிச்சது!

ஆக்சுவலி இந்த சோழப்படை இவ்ளோ ஈசியா மலை ஏறக் காரணமே கீழ்க்காடர்கள்,மேற்காடர்கள்,குறுங்காடர்கள்ன்ற காட்டுவாழ் மக்களால தான்! அவங்க பறம்போட எதிரிங்க! அங்கவை மரத்துல உட்கார்ந்து பார்க்கும் போதே அவங்க காதுல குத்தியிருக்கிற தோடுகளை அடையாளமா சொல்லியிருப்பா! அதை வைச்சே இவங்க தான்னு பாரி கெஸ் பண்ணியிருப்பான்!

காலாட்படையோட நடந்து வந்திட்டிருக்கிற சோழ வேந்தன் நெடுங்காடர்களின் தலைவன் துணங்கன் கிட்டக் கேட்பான் 

“எதிரிகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” அப்டின்னு.

“அவர்கள் நம்மைப் பல நாட்களாகப் பின் தொடர்கிறார்கள்”ன்னு அசால்ட்டா சொல்லுவான் அவன்.

“தொடருபவர்கள் ஏன் தாக்க முற்படவில்லை”ன்னு வேந்தன் கேட்டதும் 

“நம் நோக்கம் என்னவென்பதை அறிந்து கொள்ளாமல் பாரி தாக்க மாட்டான்”-ன்னு பாரியைப் பற்றி பெருமையா சொல்லுவான்.

உடனே “நீ பாரியைப் பார்த்திருக்கிறாயா?”-ன்னு வேந்தன் கேட்பான்.

“பார்த்திருக்கிறேன். மிகத் தொலைவிலிருந்து”ன்னு துணங்கன் சொல்வான்.

“எப்போது?” –எனக் கேட்டதற்கு “இன்று” என்பான்.

எங்க,எங்கன்னு பதறுன ஆட்கள் கிட்ட “மலை முகட்டில்”ன்னு சொல்லுவான்.

“அவன் தான் பாரின்னு எப்படி முடிவு பண்ணுன?”-ன்னு கேட்பாங்க. அதுக்கு பதில் சொல்லுவான்,

“இவ்வளவு பெரும்படையை முழுமையாகப் பார்க்கவும்,கணிக்கவும் ஒருவன் எந்த உயரத்தைத் தேர்வு செய்கிறான் என்பதிலேயே சொல்லி விட முடியும், அவன் யாராக இருக்குமென்று!” –அப்டியே புல்லரிச்சுப் போச்சு எனக்கு!!!!!

இந்தப் பக்கம் தோகை நாயை சமாளிக்க முடியாமல் திணறி கடைசியில் ஒரு யூகம் வகுப்பான் தேக்கன்.

ஈங்கையன் என்னும் ஒருவனை,அவனது இனத்தவர்களை வைகைக் கரையை தீயில் கொளுத்திய நாளன்று, அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வந்திருந்தார்கள் நீலனும்,பறம்பு வீரர்களும்! அவனுடைய குலத்தவர்கள் எண்ணற்ற நாய்களைக் குடிலில் வைத்து வளர்த்தவர்கள்! அவர்களைக் கொண்டு தோகை நாயினைத் தோற்கடிப்பார்கள்! (இங்க அவங்க பயன்படுத்துற யுக்தி செம்மையா இருக்கும்)

இந்தப் பக்கம் யானைப்படை தண்ணீர் கிடைக்காம அவஸ்தைப்படும், காலாட்படை வீரர்களும் சோர்ந்து போயிருப்பாங்க! அவங்க நடந்து வர்ற பாதைல குளம் ஒன்னு இருக்கும்! அங்க 50.50 யானையா பிரிச்சு தண்ணீர் குடிக்க வைக்கலாம்ன்னு ப்ளான் பண்ணியிருப்பாங்க! அந்தக் குளத்துக்குள்ள சங்கு அட்டைகள் பாரியால் போடப்பட்டிருக்கும்! பறம்பு மக்கள் எல்லாம் சேர்ந்து சங்கு அட்டையை குடுவைல அடைச்சு, இந்தப் படை வர்றதுக்கு முன்னாடியே குளத்துக்குள்ள போட்டிருப்பாங்க!

சங்கு அட்டைகள் இரத்தம் உறியத் துவங்கியதும், யானைகளின் பிளிறல் சப்தம், காட்டின் காதைக் கிழிப்பதை நம்மால் உணர முடியும்! கூட்டமாக யானைகள் துதிக்கையை அப்புறமும்,இப்புறமும் அடித்துக் கொண்டுப் பிளிறினால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?, அடக்க முடிந்த பாகன்கள் அனைவரையும் யானை தூக்கி எறியும்! (அந்த சீன் விவரிக்கப் பட்டிருக்கிற விதம்.. சான்ஸ்லெஸ்) இதுக்கடுத்து எரியம்புகளை வேற பறம்பு வீரர்கள் வீசியதுனால.. காடு பத்தி எரியும்! எல்லாரும் மொத்தமா அழிஞ்சு போவாங்க! சோழ வேந்தன் எப்படியோ தப்பிச்சிடுவான்!

ஒரு வழியா இந்தச் சின்னப் போர் முடிவுக்கு வரும்!! சேரனும்,சோழனும் இணைந்து மண்ணைக் கவ்வியதை வேடிக்கை பார்த்த பாண்டியன் தனக்கான யுக்தியைப் பொறுமையாகப் பட்டை தீட்டிக் கொண்டிருந்தார்! இவருடன் சேரனும்,சோழனும் இணைகிறார்கள்.

மையூர்கிழாரின் மகன் இளமருதனின் தலையை நீலன் வெட்டி வீசியதிலிருந்து, பறம்பின் மீது கடும்பகை கொண்டிருந்தார் மையூர்கிழார்! அவரது ஊரானது பறம்பின் அடிவாரத்திலிருந்தது. பறம்பைப் பற்றி நன்கு அறிந்த ஒரே மனிதர் அவர்!

இதன் பிறகு மழைக்காலம் தொடங்கியது! நீலனின் மனைவி மயிலா கருவுற்றிருந்தாள்! மூவேந்தரின் தாக்குதலை எதிர்பார்த்து பறம்பு முழுவதும் கட்டுக்காவல் அதிகரித்தது. பெரும்போருக்குத் தயாரானது பறம்பு!!
இதற்கிடையில் திசைவேழரின் சொல்லுக்கேற்ப பாரியுடன் கடைசிகட்ட பேச்சு வார்த்தை நடத்துகின்றனர் மூவேந்தர்கள். அதாவது அவனிடமுள்ள் கொல்லிக்காட்டு விதை,தேவாங்கு,பாழி நகர் பொன் மணிகள் இவற்றை வணிகத்தில் ஈடுபடுத்தும் பேச்சு வார்த்தை! பேச்சு வார்த்தையை கபிலர் மூலம் நடத்த முடிவு செய்கின்றனர்.

ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நாளைக்குப் பிறகு கபிலர் மலையை விட்டு சமவெளியில் கால் பதித்து மூவேந்தர்களை சந்திக்கிறார். பேச்சு வார்த்தை காரசாரமாக இருக்கிறது!

வெளிப்படையா மிரட்டுறானுங்க! எங்களோட இணங்கிப் போகச் சொல்லுங்க பாரியைன்னு! பொதிய வெற்பன் ஒரு படி மேல போய், அங்கவை,சங்கவைல ஒருத்திய எங்களுக்குக் கட்டி வைச்சு நிலைமையை சீராக்கிக்க சொல்லுங்கன்னு எள்ளலோட சொல்றான்! கொதிச்சுப் போற கபிலர், பொறுமையா அவங்களைப் பார்க்குறார்.

“உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும். அவ்வளவு தானே?” – அசால்ட்டா கேட்டவரைப் பார்த்து எல்லாரும் தலை ஆட்டுறாங்க!

“அதோ அந்த மேடையிலிருக்கும் யாழ்களை இருவர் எடுத்துக் கொள்ளுங்கள், இரண்டு பெண்களை அழைத்து கால் சலங்கை கட்டிக் கொள்ளச் சொல்லுங்கள், என்னோடு வாருங்கள்! நான் பாட்டிசைக்கிறேன்! பாட்டிசைத்துப் பறம்பு மலை ஏறிய குழுக்களுக்கு ‘இல்லை’ எனச் சொல்லும் வழக்கம் பாரியிடம் இல்லை. மொத்த மலையையும் தந்து விடுவான்”

மூவேந்தர்களும் அவ்வளவு நேரமா ஆணவத்தோட பேசுன அத்தனை வார்த்தைகளையும் ஒரே டயலாக்-ல வெட்டி சாய்ச்சுவாரு கபிலர்! விசில் அடிச்சு, கை தட்டத் தோணுதா? எனக்கும் தான்!

கொதிச்சுப் போய் கபிலரை மிரட்டுறாங்க “உங்கள் பறம்பு பற்றியெரியும் நாள் தொலைவில் இல்லை புலவரே”-ன்னு.

அதுக்கும் நம்மாளு “நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும் தான்! பனையைக் குலச் சின்னமாகக் கொண்டவன் வேள்பாரி!” –ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு வெளியே போயிடுவார்.

இதுக்கிடையில் தன் திருமணத்துக்குப் பரிசாக வந்த காமன் விளக்கை (மையூர்கிழார் பரிசாக கொடுத்தது) ஏற்றி வைத்து அதன் சிறப்பைப் புரிந்து கொண்டு விளக்கை செய்தவனை சந்திக்க வருகிறாள் பொற்சுவை (பொதிய வெற்பனின் மனைவி. She has some issues already with pothiya verpan. அது ஒரு ட்ராக் ஓடும்).  

அடுத்து, நீலனின் மனைவி மயிலாவிற்கு வள்ளிக்கூத்து (மீன்ஸ் வளைகாப்பு). பெண்கள் திருவிழா. ஆண்கள் எல்லாரும் எல்லைக்காவலுக்குப் போயிட்டாங்க! பெண்கள் எல்லாரும் சந்தனவேங்கைல வள்ளிக்கூத்து நடத்துறாங்க! மதுவும்,ஆட்டமும்,பறை ஒலியும் காதைக் கிழிக்கும்! ஆல் லேடீஸ் ஆட்டம் அங்க!

ஊருக்குள்ள நீலன், அவன் நண்பர்கள்,சிறுவர்கள், கிழவன்கள்ன்னு மொத்தம் 22 பேர் தான் இருக்காங்க. சமயம் பார்த்து கருங்கைவாணன் (பாண்டிய நாட்டுத் தளபதி) சத்தமில்லாம மலை மேல ஏறுகிறான் அவனோடு சேர,சோழ தளபதிகளும் உடன் வருகின்றனர்.

திரையர் கூட்டத் தலைவன் காலம்பனின் மகன் கொற்றன் தான் கூட்டம் மேலே ஏறி வர்றதை முதல்ல பார்த்து ஓடிப் போய் நீலன் கிட்ட சொல்றான். ஊர்ல யாருமில்லாம, என்ன பண்றதுன்னு பதறிப் போயிட்றாங்க! ரெண்டு பேரை பாரி கிட்ட அனுப்பிட்டு மீதி ஆட்களோட தாக்குதல் நடத்துறான் நீலன். பாறையை உருட்டிக் கீழே தள்ளுறாங்க. பதிலுக்கு கருங்கை வாணனும் தாக்குறான். 600 பேரை,20 பேரால எப்படி சமாளிக்க முடியும்? ஆனாலும் இருட்டுக்குள்ள அவங்களை கதற விட்றான் நீலன். ஒரு கட்டத்துக்கு அப்புறம் சமாளிக்க முடியயதுன்னு தெரிஞ்சு கடகடன்னு கிடைக்குற பொருட்களை அள்ளிப் போட்டு பெரிய நெருப்பு வட்டத்தை உருவாக்குறான். எல்லாரும் தீக்களியைப் பூசிக்கிட்டு நெருப்புக்குள்ள போயிட்றாங்க!

மலையேறி வந்த கருங்கைவாணன் படை, பத்தி எரியுற நெருப்பு வட்டத்தைப் பார்த்து நிற்கும் போதே, நெருப்புக்குள்ளேயிருந்து வெளியே வந்து ஈட்டியை வீசி 4 பேரைக் கொன்னுட்டு மறுபடி நெருப்புக்குள்ள ஓடுறான் நீலன்.

மூவேந்தர் படை நடுங்கிப் போயிடுது! எப்படி நெருப்புக்குள்ள நிற்குறாங்கன்னு கண்டுபிடிக்க முடியல அவங்களால!

ஒரு முறை நீலன் வெளி வரும் போது அவனை அடையாளம் சொல்றான் ஒருத்தன்! உடனே அவன் மேல குறி பார்த்து ஈட்டி எறியுறான் கருங்கைவாணன். கீழ விழுறவனை அள்ளிக்கிட்டு மத்த எல்லாரையும் கொன்னுட்டு மூவேந்தர் படை கீழ இறங்கிடுது! (அதாவது நீலனை ஹாஸ்டேஜ்-ஆ யூஸ் பண்ணி, பாரியை மலையை விட்டு கீழ இறங்கி சண்டையிட வைக்கனும்! அது தான் அவங்க ஐடியா)

அடுத்து நீலனைப் பார்க்க வர்றார் கபிலர். முதன்முதலில் அவரை மலை மேல் அழைத்துச் சென்ற நீலனை அவர் மகன் போலத் தான் எண்ணியிருந்தார். பாரி கொடுத்தனுப்பிய மருத்துவ வேர்கள் சுற்றிய போர்வை ஒன்றை அவன் மீது போர்த்தி விடுகிறார். பாரி உன்னை இங்கிருந்து அழைத்துப் போவது உறுதின்னு சொல்லிட்டுப் போறார்.

அதுக்கப்புறம் போர் விதிகளை வகுக்குறாங்க! பறம்பு சார்பாக கபிலரும், மூவேந்தர்கள் சார்பாக திசைவேழரும் கோல்சொல்லியாகிறார்கள்.

இதுக்கப்புறம் போர்,போர்,போர்!!! சில கேரக்டர்ஸ் இருக்காங்க! நம்மைப் பெருசா இம்ப்ரெஸ் பண்ணுவாங்க போர் முடிவுல! தேக்கன்,முடியன்,பழையன், இரவாதன்,உதிரன்,திசைவேழர்,பொற்சுவை! எப்பாஆஆஆஆஆஆஆ! உணர்வுக்குவியல்ன்னு சொன்னேன் இல்லையா?, இவங்க தான் அந்த ஒட்டுமொத்த உணர்ச்சிகளுக்கும் காரணமா இருக்கப் போறாங்க!

பாரியின் போர் யுக்தி, அவன் எவ்ளோ பெரிய அறிவாளின்றதை நமக்குக் காட்டும்! பாரின்னா பாரி மட்டுமல்ல! நான் மேல சொன்ன, கேரக்டர்ஸ் ஒவ்வொன்னும் தனக்கான இடத்துல நின்னு விளையாடும்!

தட்டியங்காட்டுல போர் நடக்கும்! இந்த இடத்துல தான் நடக்கனும்ன்னு திசைவேழர் டிசைட் பண்றது செம்மையா இருக்கும்!

அந்த இடம் எப்படிப்பட்டதுன்னு பறம்புல ஒரு பேச்சு வார்த்தை நடக்கும்! எப்படி டெக்னிக்கல்-ஆ யோசிக்கிறாங்கன்னு பாருங்க!

 Day-1

திசைவேழர் வலது கையை உயர்த்துகிறார்! போர் சங்கு முழங்குகிறது! தாக்குதல் தொடங்குகிறது!! குளவன்திட்டிலிருந்துப் பாரி போர்க்களத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

முதல்ல குதிரைப்படை முன்னால வருது! ஈக்கி மணலும்,கருமணலும் இருக்குற தட்டியங்காட்டுல இந்த வெயிலுக்கு ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியாம எதிரிப்படை குதிரை சீக்கிரமே சோர்ந்துடும். விட்டுப் பிடிக்கனும்ன்னு பின் வாங்குவாங்க பறம்புப் படை! நினைச்சது நடந்துடும்!
சமவெளியில் பாயுற குதிரையோட குளம்புக்கும், காடு,மலைல இருக்குற குதிரையோட குளம்புக்கும் வித்தியாசம் சொல்லியிருப்பாங்க!

குதிரைப்படைத் தலைவன் இரதவாதன்! சூறைக்காற்று வேகத்துல குதிரையைச் செலுத்தக் கூடியவன். முடியனின் மகன்! அவ்ளோ தான்! நொறுக்கி அள்ளிடுவான் மூவேந்தர் படையை!

அடுத்து விற்படை! பறம்பு தரப்புல உதிரன்! பறம்போட வில் படையை வீழ்த்த முடியாதுன்னு வேந்தர் படைக்குத் தெரியும்! சோ, பின்வாங்க ஆரம்பிச்சிடும்!

அடுத்து வாள்படை! பறம்பின் தரப்பில் தேக்கன் தான் தலைமை! திட்டப்படி முதல்ல பின்வாங்கிட்டிருந்தார் தேக்கன்!

அடுத்து யானைப்படை! தலைவன் பழையன்! யானைப்படை எங்கக் கிட்ட கிடையாதுன்னு ஒரே போடா போட்றான்! இதுக்குப் பின்னாடி ஒரு யுக்தி இருக்கு! அதைப் படிச்சா புரியும்!

ஒரே நாள்ல போரை முடிச்சிடலாம்ன்னு முடிவு பண்ணுன மூவேந்தர் படைக்கு, குதிரைப்படை பின் தங்குறது முதல் செய்தியா வருது! ஆடிப் போறான் கருங்கைவாணன். பத்து நாழிகைக்கு ஒரு முறை யுக்தியை மாத்துறது தான் பாரியோட ப்ளான்! 10 நாழிகையானதை சொல்லும் பொருட்டு பறம்பு தரப்புல இருந்து காரிக்கொம்பு ஊதுற சத்தம் காதைக் கிழிக்குது!

இந்த இடத்துல ஒரு க்ளோஸ் அப் வைக்கலாம்! அதிர்ச்சியோட திரும்புற கருங்கைவாணன் முகம் காரிக்கொம்பு ஓசை கேட்குற பக்கம் திரும்பிப் பார்க்கும்!

பறம்பு வீரர்கள் அணிந்திருந்த மெய்க்கவசம் முழுக்க,முழுக்க வேர்களும்,செடிகளாலும் ஆனது. அதே போல தண்ணீர் தாகமெடுக்காமல் இருக்க ஏதோ வேரை உறிஞ்சிக் குடிச்சிருப்பாங்க! இந்த மாதிரி குட்டி,குட்டி யுக்தி நிறைய இருக்கும்!

ஆக மொத்தம் இது வரைக்கும் பறம்பு வீரர்களோட மயிரைக் கூட புடுங்க முடியல இவனுங்களால!

குறுக்கும்,நெடுக்குமா எல்லாப் பக்கத்துலயும் புகுந்து நம்ம பாய்ஸ் கொன்னு குவிச்சிட்டிருந்தாங்க! வேந்தர் படையால எதுவுமே செய்ய முடியல! மோர் ஓவர், அவங்க களைச்சுப் போய்ட்டாங்க வேற!

இதுக்கிடைல முடியன், மூவேந்தர்களின் ஆயுதக் கட்டைக் கொண்டு வரும் யானையோட செவிப்புறத்தில் மூவிலை வேலை எறிகிறார். யானையின் பிளிறல் காதைக் கிழிக்குது! அடுத்து இன்னொன்னையும் யானை மேல எறியுறாரு!

கத்திக்கிட்டு யானை சுத்தி நின்னுட்டிருந்த அத்தனை பேரையும் அடிச்சு விளாசுது! ஈட்டியை பிடுங்க நினைச்சு அது பக்கத்துல போனா.. அது இன்னும் மூர்க்கமாகி, எறும்பை நசுக்குற மாதிரி பல வீரர்களை மிதிச்சுத் தள்ளிடுது!

காரிக்கொம்பு ஊதுறது, இரிக்கிச் செடியோடு பாலை வைச்சு மலை மேல இருக்குற பாறைல குறியீடுகள் வைச்சு எந்தப் படை எப்போ முன்னேறனும்ன்னு ஏகப்பட்ட யுக்தி இருக்கு நம்ம பாய்ஸ் கிட்ட!

கொஞ்ச நேரத்துல நிலைமை கை மீறுது! கருங்கை வாணனுக்கு நடக்குறது ஒன்னும் புரியல! எல்லாப் பக்கமும் வேந்தர் படை தடுமாறுது! அப்போது திடீரென நீள் சங்கின் ஓசை! அந்த ஓசைக்கான அர்த்தம்.. வேந்தர் படையைச் சேர்ந்த தலைவன் ஒருத்தன் செத்துட்டான்றது!

எதிரிப்படைக்குள்ள நுழைந்தது தளபதிகள் 2 பேர்! ஒருத்தன் சோழ நாட்டைச் சேர்ந்த நகரிவீரன்-தேர்ப்படை. இன்னொருவன் சாகலைவன்-பாண்டிய நாட்டு வீரன். கருங்கை வாணனுக்கு அவன் வீரத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். 

எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்குறான் கருங்கை வாணன்! தூரத்துல நகரிவீரன் போரிட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது! கருங்கைவாணனால நம்பவே முடியல! வேகமா குதிரையைத் திருப்பி உள்ளே நுழையுறான்.

அப்போ கரெக்ட்டா திசைவேழர் போர் நேரம் முடிஞ்சிடுச்சுன்னு கைகளை உயர்த்துறார்! பாய்ந்து சென்ற கருங்கைவாணன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்கிறான். இப்போ பாருங்க எப்டி எழுதியிருக்கிறார்ன்னு!

கொப்புளித்த குருதி மேலெல்லால் பீச்சியடித்திருக்க, முகத்தைத் துடைத்தபடி, விரிந்து கிடந்த தலைமுடியை உச்சந்தலையில் ஏற்றிக்கட்டி அருகிலிருந்தக் குதிரையில் தாவி ஏறினான் தேக்கன்!!!!!!!!!!!!!! வாவ்! வாவ்! வாவ்! கிழவா... நீ ஹீரோய்யா!! ஹீரோ!!!

அடுத்து மறு நாளுக்கான திட்டத்தை வகுக்கிறார்கள் இரு தரப்பும்!
இன்னிக்கு பாரி வந்தானான்றது தான் பேச்சா இருக்கு வேந்தர் படைல.
குடி ஆசானும் (தேக்கன்), குடி முடியனும் (முடியன்) இருக்கும் வரை பறம்பின் தலைவன் மண்ணை விட்டு இறங்க மாட்டான்!  - இது விதி.
ஏகப்பட்ட விஷயங்களை அலசுறாங்க வேந்தர்கள்!

Day-2

அடுத்த நாள் போர் தொடர்கிறது. இரதவாதன் முழு மூச்சா இறங்குறான். கருங்கைவாணன் தேக்கனை டார்கெட் பண்றான். தேக்கனுக்கும், கருங்கைவாணனுக்கும் சண்டை பலமாகுது! மரணபீதியைக் கருங்கைவாணனுக்குக் காட்டுறான் தேக்கன்! கடைசில தேக்கனோட வாள் கருங்கைவாணனோடக் கழுத்துக்குப் பாயும் போது, இடைல புகுந்துட்றான் சூலைக்கையன். கருங்கைவாணனோட வாள் பாய்ஞ்சு தேக்கனுக்கு நெஞ்சுல அடிபடுது! அப்போ.. நீள் சங்கு ஓசை கேட்குது! அதிர்ந்து போய் கருங்கைவாணன் அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

ஓங்கலம்ன்ற ஆயுதத்தை வைத்துக் குதிரைகளை மயங்கச் செய்திருப்பாங்க நம்மாளுங்க! குதிரைகளெல்லாம் கீழ விழ ஆரம்பிச்சிடும்! இதோட 2-வது நாள் போர் முடிவுக்கு வரும்!

Day-3

மூன்றாம் நாள் போர் தொடங்குது! தொடக்கத்துல இருந்தே முழு வேகத்தோட பாயுறாங்க நம்ம பாய்ஸ்!!

இன்னிக்கு தேக்கனையும்,முடியனையும் காலி பண்ணி, மறு நாள் போருக்கு பாரியை இறக்கனும் இது தான் வேந்தர் படையோட ப்ளான்!

மையூர்கிழார் மேல பறம்பு பாய்ஸ் கோபமா இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டு.. அவரை முன்னாடி நிறுத்துனா.. பறம்பு வீரர்கள் அவரைத் தான் துரத்துவாங்க! அவரை போர்க்களத்தை விட்டு வெளியே வர வைச்சு, கூடவே முடியனையும்,தேக்கனையும் வர வைச்சு போட்டுத் தள்ளனும்!

ஒரு ஸ்டேஜ்ல முடியன், மையூர்கிழாரைப் பார்த்துட்றார். சோ, ஃபாலோ பண்றார் அந்தாளை! ஏதோ யோசிச்சு, அவர் பழையனைக் கூப்பிட்டு தன்னோட தேர்ல ஏறச் சொல்லிட்டு முடியன் இரவாதனை நோக்கிப் போயிட்றார்.

இதுக்கிடையில தேக்கனுக்கு நெஞ்சுல அடிபட்டதால, அவர் போர் புரியாம, ஜஸ்ட் போர்க்களத்துல நிற்க மட்டும் செய்றார். கருங்கைவாணன் அவரைப் பார்த்துட்டு அவர் கிட்ட வரத் தொடங்குறான்.

அவனைப் பார்த்ததும் விசில் அடிச்சு ஆட்களை சேர்க்குறார் தேக்கன். உடனே கூழையன் வந்துட்றாரு! கூழையனுக்கும்,கருங்கைவாணனுக்கும் சண்டை நடக்குது! வாள் வித்தை அவ்வளவா தெரியாத கூழையன்! அவன் கிட்ட தோத்துப் போய், செத்தும் போயிட்றார்.

அப்போ பறம்பு குதிரைப்படை மூஞ்சல் (நீலன் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம்) கிட்ட நெருங்கிடுது. முச்சங்கு ஊதி நிலைமையோட தீவிரத்தை உணர்த்துறாங்க! அந்த சமயத்துல மூன்றாம் நாள் போர் முடிவுக்கு வருது! கைக்குக் கிடைச்சது வாய்க்குக் கிடைக்காம போயிடுச்சேன்னு சோகத்துல பறம்புப் படை திரும்புது.

இந்தப்பக்கம் மையூர்கிழாரை விரட்டிச் சென்ற பழையனை எதிர்ப்படை சூழ்ந்து கொல்கிறது. போர் முடிஞ்சிதா நினைச்சு பழையன் வில்லைக் கீழே இறக்கிய சமயம், அவர் மேல அம்பெறியுறானுங்க இந்த பீக்காளிப் பசங்க! அவர் பட்டுன்னு தேரை விட்டிறங்கி மலை மேல ஓடிட்றார்.

அவரைத் தொடர்ந்து சூலக்கையன் இன்னும் சில வீரர்களும் விரட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். “போகாதீங்க”ன்னு மையூர்கிழார் கத்தியும் கேட்கல.

வேகமா ஓடுன பழையன் ஒரு மரத்து மேல சாய்ஞ்சு நிற்குறார்.

“பறம்புத் தளபதி கோழை போல ஓடி ஒளிந்தான்னு உன்னைப் பத்தி மக்கள் பேசுவாங்க”-ன்னு நகரிவீரன் சொல்றான்.

“இல்ல, 2 தளபதிங்களையும், நூற்றுக்கணக்கான வீரர்களையும் கொன்று விட்டுச் செத்தான் என்று தான் ஊர் பேசும்ன்னு” தெனாவெட்டா சொல்றார் பழையன்.

வாய் விட்டு சிரிச்சிட்டு “இழுத்துட்டு கிடக்குற நீ எங்களைக் கொல்லப் போறியான்னு?” அவன் கேட்டதும் பதிலுக்கு சிரிக்குற பழையன்..

“இனி நீங்கள் யாரும் உயிர் பிழைக்க முடியாது.உங்கள் மூச்சுக்காற்றுக்குள் சொனைகள் ஏறி விட்டன”அப்டின்னு சொல்லிட்டு “இது ஆட்கொல்லி மரம்”-ன்னு சொன்னபடியே கண்ணை மூடிடுவார்! செம்ம செம்ம செம்ம!! சல்யூட் பழையன்!!!!

இதுக்கப்புறம் ஒரே சலசலப்பு வேந்தர்களுக்கிடையில்! ஒவ்வொருத்தரும் பல யுக்தியை வகுக்குறாங்க! பறம்பு படையிலும் வேதனை! பழையன்,கூழையன் என பல பேரை போர் காவு வாங்கி விட்டது! தேக்கனுடைய வலியும் அதிகமாகிறது.

Day-4

நான்காம் நாள் போர் துவங்குது! இன்னிக்குப் பறம்போட நோக்கம் மூஞ்சலைச் சுற்றியுள்ள மூன்று கட்டப் பாதுகாப்பை உடைத்தெறிந்து முன்னேறுவது தான்! திட்டத்தை வகுத்து போரை எதிர் கொள்கிறது பறம்பு! ஆனால்.. வகுக்கும் திட்டங்களனைத்தும் நடைபெறுவதில்லையே!

போர் தொடங்குனதும், திடீர்ன்னு எல்லாப் பக்கத்துல இருந்தும் வேந்தர்படை தாக்கி, பறம்புப் படையை சுற்றி வளைக்கிறது.

இங்க இவங்களை கார்னர் பண்ணிட்டு, யானைப்படையை மலை மேல ஏற்றுவது தான் வேந்தர் படையின் திட்டம்! ஏனென்றால், மலையில் தான் பறம்பின் ஆயுதக்கிடங்கு இருக்கிறது. யானைப்படையை வைத்து வழியை அடைத்து விட்டால், பறம்புப் படைக்கு ஆயுதம் கிடைக்காது! அப்டியே ரௌண்ட் கட்டிடலாம்ன்றது இவங்க நோக்கம்!

பட், மேல ஒருத்தன் நிற்குறானே! பாரி,பாரின்னு பேர் வைச்சுக்கிட்டு!

கூவல் குறியீடு மூலமா பாரிக்கு செய்தியைக் கடத்துறாங்க நம்ம படை! இன்னும் திரையர் குலத் தலைவனான காலம்பரனை களமிறக்கல பாரி!

ஏன்னா.. இவங்க ஆளுங்கள்ல ரெண்டு குரூப்-ஐ காட்டெருமைக் மந்தைப் பக்கம் அனுப்பியிருந்தான் பாரி. இப்போ ரெண்டு குரூப் ரெண்டு காட்டெருமை மந்தைங்களை வைத்துக் கொண்டு எதிரிகள் எப்போது மலை ஏறுவார்கள், எப்போது தாக்கலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறது.

அவங்களை ஏவுறான் பாரி! பாய்ந்து வருகிற காட்டெருமைக் கூட்டம், யானைப் படையை சிதறச் செய்கிறது. கிடைக்குற கேப்-ல காலம்பன் ஆயுதங்களைக் கொண்டு போய் சேர்க்கிறான் நம்ம பாய்ஸ் கிட்ட. அடுத்து என்ன, முழு வேகத்தோட போர் மறுபடி தொடங்குது!

இதற்கிடையில் கபிலரைச் சந்திக்க விழைகிறாள் பொற்சுவை. அவள் அவரது மாணவி! காமன் விளக்கு செய்த காராளியிடம் விசயத்தை சொல்லி அனுப்புகிறாள். கபிலரும் வேறு வழியின்றி நாளையோ,அதற்கு மறு நாளோ சந்திப்பதாக சொல்லியனுப்புகிறார்.

அன்றைய போர் முடிந்து மூவேந்தர்கள் சதியாலோசனை நடக்குது. மையூர்கிழார் முன்ன வந்து மூவேந்தர் படை செய்யுற தப்பை புட்டு,புட்டு வைக்குறார். மறு நாள் போருக்கு மையூர் கிழாரைத் தலைமை தளபதியா போட முடிவாகுது. கொதிச்சுப் போயிட்றான் கருங்கைவாணன்.

இந்தப் பக்கம் மூஞ்சிலை உடைக்குற திட்டத்துக்கான யுக்தியை இரவாதன் விளக்குகிறான். எல்லாரும் சேர்ந்து தாக்குதல் யுக்தியை வகுக்குறாங்க.
இனி நேராத் தாக்குறது பயன் படாதுன்ற முடிவுக்கு வர்ற மூவேந்தர்கள், ஆளுக்கொரு முறைல பாரியைத் தூக்க முயற்சிக்கிறாங்க.

சோழனும்,சேரனும் ஈங்கையனை வளைச்சுப் போட்டு, பாரியைக் கொல்ல முயற்சிக்குறாங்க. பாண்டியன், பொற்சுவை மூலமா கொல்லப் பார்க்குறான். எல்லாரும் அன்றைய நாள் இரவுக்காகக் காத்திருக்காங்க.

இரவு வருகிறது. பொற்சுவையோட பல்லக்கு மலை மேல ஏறுது. பொற்சுவையோட தோழி சுகமதியும் பல்லக்குக்குள்ளே இருக்கா.
கபிலரைக் காணப் போகும் தன் நோக்கத்தைத் தோழியிடம் மெல்லிய குரலில் பகிர்ந்து கொள்கிறாள் பொற்சுவை.

சேரனும்,சோழனும் இணைந்து ஈங்கையன் மூலமாக பாரியைக் கொல்லப் போகும் திட்டத்தைப் பாரியிடம் தெரிவிக்கவே தான் செல்வதாகக் கூறுகிறாள்

பேசிக் கொண்டிருக்கும் போதே உணர்கிறாள், தினமும் தன் பல்லக்கை சுமந்து செல்லும் ஆட்கள் அல்ல இவர்கள் என்று!

பொற்சுவையின் மாமனாரான குலசேகரப் பாண்டியன், தன் மூலமாகவே பாரியைக் கொல்ல ஆட்கள் அனுப்பியிருப்பதை நொடியில் புரிந்து கொள்கிறாள். ஊர் போற்றும் பாரியைக் காப்பாறியே ஆக வேண்டுமென்று முடிவு செய்கிறாள்.

என்ன செய்வதென்கிற யோசனையுடனே பல்லக்கை விட்டு இறங்குபவள் நேராகக் கபிலரின் காலில் விழுந்து வணங்குகிறாள். பின் எழுந்து.. “ஈங்கையன் எங்கிருக்கிறார் ஆசானே?” என்று கேட்கிறாள்.

ஈங்கையைனை எதற்காகக் கேட்கிறாள் என்று புரியாத கபிலரும், அவனை நோக்கிக் கை காட்ட.. நேராக அவன் காலில் சென்று அவள்ம்விழுந்து வணங்க, அந்த நொடி.. பல்லக்கில் செருகி வைத்திருந்த ஈட்டிகளை எடுத்து ஈங்கையனின் மீது சரமாரியாக எறிகிறார்கள் பல்லக்குத் தூக்கிகள்.

நொடியில் இடம் ரத்தக்களறியாக விட.. ஈட்டி பட்டு ஈங்கையனும்,பொற்சுவையும் உயிர் துறக்கிறார்கள்.

அவள் யார் காலில் விழுந்து வணங்குகிறாளோ, அவனே பாரி என்று அவர்கள் ஈட்டி எறிவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பொற்சுவை, துரோகம் செய்யவிருந்த ஈங்கையனின் காலில் விழுந்து, அவனை ஈட்டியேற்க வைக்கிறாள்.

தான் முன்,பின் அறிந்திராத பெண்ணின் தியாகமும், ஈங்கையனின் துரோகமும் பாரியை நிலை குலையச் செய்கிறது. கபிலரும்,சுகமதியும் அழுது துடிக்கிறார்கள்.

Day-5

மறுநாள் போர் வழக்கம் போலத் துவங்குகிறது. முந்தைய நாள் இரவு என்ன நடந்ததென்ற குழப்பத்திலேயே வேந்தர் படை தாக்குதலை நடத்துகிறது. பறம்பு படையோ, முந்தைய நாளிரவின் திகில் குறையாமலே தாக்குதலைத் தொடர்கிறது.

குதிரைப்படைத் தலைவன் இரவாதன் மட்டும் முழு வேகத்தோடு எதிரிப்படையில் முன்னேறிக் கொண்டிருந்தான். எதிரிப்படை பெரிதாக அவனைத் தாக்க முற்படவில்லை. அவனை உள்ளே வர வைப்பது தான் அவர்களது உத்தி போலும்! பாரி மீண்டும்,மீண்டும் ஓசை எழுப்பியும் இரவாதனைத் தடுக்க முடியவில்லை! அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை! வேகம்,வேகம் என மூஞ்சிலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். முடியனால் இரதவாதனோடு இணைந்து கொள்ள முடியவில்லை. எதிரிப்படை பலமாக போர் புரிந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மூஞ்சிலை உடைத்து இரதவாதன் உள்ளே நுழையத் தொடங்கியிருந்தான். மற்ற தளபதிகளனைவரும் நகரமுடியாத அளவு சிக்கியிருந்தனர்.

மூஞ்சலைக் காக்க வேண்டி மையூர் கிழார் ஒருபுறம்,இரவாதனைக் காக்க வேண்டி தேக்கன் ஒருபுறம் என இருபுறமும் பதற்றம் நிலவியது.

மூஞ்சலுக்குள் தனது மொத்தப் படையையும் இறக்கித் தாக்குதல் நடத்துகிறார் குலசேகர பாண்டியன். ஆனால் இரதவாதனின் வேகத்தில் ஒரு பங்கைக் கூட அவர்களால் செலுத்த முடியவில்லை. கடைசியாக உதியஞ்சேரலும்,பொதிய வெற்பனும் களமிறங்குகிறார்கள். ஆனால் இரவாதன் ரெண்டாவது தடுப்பை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்.
உடம்பு முழுதும் ஆயுதங்களைச் சுமந்தபடி, பம்பரமாய்ச் சுழலும் பறம்பு வீரர்களை, வேந்தர் படையால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரண்டு கைகளிலும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஆவேசத்துடன் நின்ற இரவாதனைப் பார்த்து மிரண்டு போய் நின்றனர் அனைவரும். கடைசியில் அவன் நீலனிருக்கும் கூடாரத்தினருகே சென்றடைந்தான். அபாயச் சங்கு ஊதப்பட்டது. வேந்தரின் சிறப்புப் படை வீரர்கள் உள் நுழைந்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் ஆறு பரண் களின் மேலிருந்தும் முரசின் ஓசை ஒலித்தது. அனைவரும் மூஞ்சலை நோக்கி ஓடினர்.

ஒரு குறுகிய வட்டத்துக்குள் நடந்த போர் அது! இரவாதனும்,பறம்பு வீரர்களும் கொன்று குவித்த குதிரைகளும்,மனிதர்களும் எண்ணிலடங்க மாட்டார்கள்! அவன் எதிர் கொண்டது சிறப்புப்படை வீரர்களை! பெரும் ஆபத்து என்றால் மட்டுமே களமிறங்கும் மாவீரர்களை! அத்தனை பேரையும் கொன்று குவித்து.. நீலனை நெருங்கியவனின் கதி என்னவானது?

மூஞ்சல் வாசலருகே நெஞ்சு நடுங்க நிற்கிறார் முடியன். தூரத்தில் ஒருவன் நடந்து வருவது தெரிகிறது. அவன் பறம்பைச் சேர்ந்த கரிணி. அவனருகே ஓடிச் செல்கிறார் முடியன். தான் கொண்டு வந்த ஈர்வாளை முடியனின் கையில் சமர்ப்பித்து விட்டு மண்ணில் சரிகிறான் அவன்!
பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் வீர மரணம் அடைந்து விட்டான்! அவனது ஈர்வாள் அது!

இரவாதனின் உடலைத் தூக்கிக் கொண்டு மலையேறுகிறான் தேக்கன். யாரிடமும் கை மாற்றவில்லை. நேராகப் பாரியின் காலடியில் அவன் உடலைப் போட்டு “காட்டின் தலை மகனை இழந்து விட்டோமடா பாரி” எனக் கூறிக் கதறுகிறான். மலை உடைந்து சரிவதைப் போல அவன் குரல் காடெங்கும் ஒலிக்கிறது.

இதுக்கிடையில திசைவேழர் கபிலரை அழைத்து வரச் சொல்கிறார். அவர் வந்ததும் மூவேந்தர்களையும் அழைக்கிறார். அன்றைய போரில் நடந்த விதிமீறலை எடுத்துக் கூறுகிறார்.

அதாவது.. இரவாதன் கடைசி வரை போரிட்டு நீலனை அழைத்துக் கொண்டு கூடாரத்தைக் கடக்க முற்பட்ட போது அன்றைய போர் முடிந்ததற்கான முழக்கம் வந்திருக்கிறது. யுத்த தர்மத்துக்குக் கட்டுப்பட்டு, நண்பனைத் திருப்பி கூடாரத்தினுள்ளே அனுப்பி வைத்த இரவாதன் தன் ஆயுதங்களையும் கீழே போடுகிறான். திரும்பிச் செல்லும் நண்பனைக் கண்டபடி நிற்பவனின் முதுகில் பாய்ந்திருக்கிறது பொதியவெற்பன் மற்றும் சோழவேழனின் ஈட்டி.

திசைவேழர் கூறியதைக் கேட்டு நடுங்கி நிற்கின்றனர் வேந்தர்கள் மூவரும். அப்படியும் நிலைமையைச் சமாளிக்க முயல்கின்றனர்.

இந்தப் பேச்சு வார்த்தை முழுக்க செம்ம காரசாரமா இருக்கும். கோபமும்,அழுகையுமா வாசிச்சிட்டிருந்த நமக்கு, எப்பேர்ப்பட்ட கோழைங்க 3 பேரும்ன்னு அருவெறுப்பே வரும்!

இந்தப் பக்கம் இரவாதனின் உடலை ஒப்படைத்தத் தேக்கன் நேரா தன்னோட குடிலுக்குப் போய்டுறாரு. உள்ளே வந்து உட்கார்றவருக்கு முழுக்க முழுக்க யோசனை தான்! முழு ஆற்றலோடு தான் போரிடாமல் நிற்பதே பறம்பின் இறக்கத்திற்குக் காரணம் எனக் கருதுகிறார். தான் உயிரோடிருக்கும் வரை பாரி களமிறங்க முடியாதென்று நினைக்கிறார்.

நிறைய யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்றார். தன்னோடு வில்லையும்,அம்பையும் கையில் எடுக்குறார்.

இங்க திசைவேழருக்குக் கோபம் கட்டுங்கடங்காமல் பொங்கி வழியுது! “இனி பொதிய வெற்பனும்,சோழனும் போரிடக் கூடாதுன்னு வலியுறுத்துறார். “கிழவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு” இவனுங்க தெனாவெட்டா நிற்குறானுங்க.

கடைசில திசைவேழர் “இந்த மாதிரி ஆளுங்களுக்குப் போய் கோல்சொல்லியா நின்னேனே! எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிறது தான் சரின்னு” சொல்லி “இரவாதன்!! உன்னைப் போல நெறி தவறாத வீரர்கள் என்றென்றும் போற்றப்படுவீர்கள்! இரவாதன் மரணமற்றவன் என்பதைக்காலம் உணர்த்தும்! தட்டியங்காட்டுப் போர் நினைவிருக்கும் வரை உன் புகழ் இருக்கும்” என்றபடியே நாழிகைக் கோல் ஒன்றை எடுத்துத் தன் குரல்வளையில் இறக்குகிறார்.

இங்க தேக்கன் நிமிர்ந்து வானத்தைப் பார்க்குறாரு! பறம்பின் ஆசானாகத் தான் பொறுப்பேற்ற நாளை நினைச்சுப் பார்க்குறாரு! தான் பயிற்சி கொடுத்த மாணவர்களை நினைக்கிறார், இரவாதனை நினைக்குறார், பாரியை நினைக்குறார்! எல்லாத்தையும் நினைச்சபடியே வில்லைப் பூட்டி அம்பை தன் விலா எலும்புகளை நோக்கிச் செலுத்துகிறார்.

ஒரே நேரத்துல 2 பேரும் செத்துப் போறாங்க!

தேக்கனைத் தேடி வந்த வீரன் ஒருத்தன், அவர் செத்துக் கிடக்குறதைப் பார்த்துட்டு, இரண்டு கைலயும் அவரை ஏந்திக்கிட்டு காட்டுக்குள்ள ஓடுறான்! ஓடுற காடு முழுக்க ஒலியெழுப்பி பறம்போட ஆசான் இறந்த செய்தியை கத்திக்கிட்டே ஓடுறான்! அழுகையோட மூச்சடைக்க அவன் கத்துற ஒலி.. நம்ம காதுக்குள்ள ஒலிச்சு.. நெஞ்சைப் பிசைய வைக்குது!

தேக்கன்,இரவாதன் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யலாம்ன்னு பெரியவங்க சொல்லும் போது பாரி “மூவேந்தர்களையும் வென்று, நீலனை கூட்டி வந்த பிறகு இறுதிச் சடங்கை வைச்சுக்கலாம்ன்னு சொல்லிட்றான்.

அடுத்து வேள்பாரியோட ஆட்டம் ஆரம்பம்!! எப்படியெல்லாம் ஓட விடப் போறான்றதைப் பார்த்துக் கண் குளிர ரசிக்கலாம் நாம!

பறம்பு மலையில் வசிக்குற ஒட்டு மொத்தக் குலங்களும் பாரியோட இணையுது! சாரை,சாரையா மக்கள் மலையிலிருந்துத் தீப்பந்தத்தை தூக்கிட்டு கீழ இறங்குது.

இங்க வேந்தர் படை தின்னுட்டு தூங்கிடுது! ,மூவேந்தர்கள் நீலனை வேற இடத்துல அடைச்சு வைக்குறாங்க!

பறம்புப் படை இப்போ நேர்மையெல்லாம் கை விட்டுட்டுச்சு! முதல்ல நெருப்புப் பூச்சியிருக்கிற தீப்பந்தங்களைக் கொண்டு வந்து வீரர்கள் இருக்குற பகுதில நட்டு வைப்பாங்க!பல் வகை நச்சுப் பூச்சிகளை உள்ளடக்கிய தீப்பந்தம் அது! கடிச்சா.. அவ்ளோ தான்!
அடுத்து பிசின் தடவிய ஈட்டி! அதுல அட்டைப்பூச்சியும், கொம்புதூக்கி வண்டும் மொய்க்கும். அது கடிச்சா.. ஒரு மாசத்துக்கு நம்மால எதுவும் பண்ண முடியாது.

வீரர்களை விரைவில் அப்புறப்படுத்தனும்ன்னு நினைச்சுக் குழம்பி, பதற்றத்துல சொதப்பி பூச்சிக்கடிக்கு ஆளாக்கி, வெளியே தயாரா நின்னுட்டிருந்த உதிரனின் படையோடு சிக்கி மொத்தமாக சேதாரத்துக்கு ஆளாகிறது வேந்தர் படை.

மழை பெய்யத் தொடங்குது! மூவேந்தர்களுக்குள்ள தன்னோட படையை இழப்பதான்ற ஈகோ வருது! குழப்பம் வருது! ஒற்றுமை குலையுது!

மூவேந்தர்கள்,மையூர்கிழார், கருங்கைவாணன் போன்ற சிலர் தப்பிக்கின்றனர். மையூர்கிழார் அவர்களை வழி நடத்திச் செல்கிறார்.

“கூட்டத்துக்குள்ள பாரி இருக்கிறானா?” என்ற கேள்விக்கு..

“இருளின் எல்லாத்திசைகளீலும் பறம்பு வீரர்கள் இருப்பார்கள். பறம்புப் படையணி எல்லாவற்றுக்குள்ளூம் பாரியிருக்க வாய்ப்பிருக்கிறது”-ந்னு பதில் கொடுக்குறார் மையூர்கிழார்.

இதுல பியூட்டி என்னன்னா.. இவனுங்க இவ்ளோ பேசிட்டிருக்கும் போது.. சத்தமே இல்லாம.. இவனுங்க பேசுறதைக் கேட்டுட்டே பின்னால வந்திட்டிருக்கிறது.. வேள்பாரி! அது கூடத் தெரியாம பேசிட்டு வர்றானுங்க!

நீலனை எங்க மறைச்சு வைச்சிருக்காங்கன்னு தெரியுற வரைக்கும் தாக்க வேண்டாம்ன்னும் பொறுமையா அவங்க பேசுறதக் கேட்டுட்டு பின்னால வருவான் பாரி! பாஆஆஆஆரி!!!!!!

மழை வேகம் குறைஞ்சு,விடியுது! இடைல வந்த ஆற்றைக் கடந்து மூவேந்தர் படை முன்னால போயிடுது! பாரி பின் தங்கிடுறான்.

ஆத்துக்கு அப்பால இருக்குற கோட்டைல தான் நீலனை வைச்சிருக்காங்கன்னு முடியன் கண்டுபிடிக்கிறார். 300 யானைகள் காவலுக்கு நிற்குது! உடனே தந்தமுத்துக்காரர்களுக்கு சொல்லியனுப்பிட்றார் முடியன். இவங்க யானையை ஹேண்டில் பண்றதுல எக்ஸ்பர்ட்!

மிச்சமிருக்குற வீரர்களை வைச்சிக்கிட்டு ஆத்துக்கு அந்தப் பக்கம் கெத்து காட்டுறானுங்க மூவேந்தர்கள். மலை மக்கள் ஆற்றுக்குள் கால் வைக்க அஞ்சுவார்கள்ன்னு மையூர்கிழார் சொன்னதை நம்பி குதூகலமா இருக்கானுங்க! கருங்கைவாணன் வழக்கம் போல உத்திகளை வகுக்கிறான்.

நெட்டீட்டிகளை வீசச் சொல்ன்னு உத்தரவு கொடுத்தபடி போரைத் துவங்குகிறான் பாரி.ஈட்டி போய் ஆத்துல நிற்குறதை வைச்சு ஆழத்தைக் கணிக்கிறான். தண்ணியோட வேகத்தையும் கணிக்கிறான்.

அப்போ தந்தமுத்துக்காரர்கள் 4 யானையோட வர்றாங்க! கூவல் ஓசை கேட்குது! ஆத்துக்குள்ள இறங்கவான்னு கேட்டு! “இறங்கு,ஆனால் அக்கரையில் ஏறாதேன்னு பாரி பதில் கொடுக்கும் போது.. சலசலன்னு தண்ணிக்குள்ள சத்தம்.

நம்ம காட்டெருமை பாய்ஸ் திரையர்கள் தண்ணிக்குள்ள இறங்கிட்டானுங்க! மூவேந்தர்கள் தாக்கத் தொடங்குறாங்க! அப்போ எதிர்க்காத்து அடிக்குது! குளவன் திட்டிலிருந்து சுருளம்பு பாய்ந்து எதிரிகளில் பலரை விழுங்குது! இருளிக்கிழவனுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்றான் பாரி!
காட்டாத்துக்குள்ள இறங்குது பறம்புப் படை!

மேல ஏறி வந்த காலம்பனோட சண்டை போட முற்படுகிறான் கருங்கை வாணன். 4 அடி அகலத்துல இருக்குறவனை என்ன செய்ய முடியும் அவனால? தன் இனம் அழியக் காரணமாயிருந்தவனை உக்கிரமாகத் தாக்கி உயிரைக் குடிக்கிறான் காலம்பன்.

ஆற்றைக் கடந்து மேட்டின் உச்சியில் நிற்கிறான் பாரி. முதன் முறையாக இப்போது தான் சமதள வெளியைப் பார்க்கிறான். தூரத்துல தெரியுற கோட்டையைப் பார்த்தபடி அப்படியே நிற்கிறது பறம்புப் படை. ஏன் நிற்கிறாங்கன்ற குழப்பத்துல வேந்தர் படை!

சமவெளியில் பாரியின் பலம் குறைந்து விடும், அந்தச் சின்னப்படையை வெட்டி வீழ்த்தி விடலாம்ன்னு நினைக்குறானுங்க மூவேந்தர்கள்! சோ, படையை மூன்றாகப்பிரிக்கிறாங்க!

பாரியும் மூன்றாகப் பிரிக்கிறான் தன் சிறிய படையை. நீலனை மீட்பது தான் நோக்கம், எனவே தந்தமுத்துக்காரர்கள் தாக்கத் தொடங்கியவுடன் தங்களது தாக்குதலைத் தொடங்குவோம் எனப் படையிடம் விவரிக்கிறான்.

நீ லெஃப்ட்-க்கா போ, நீ ரைட்-க்கா போ, நான் நடுவுல போறேன்னு பாரி சொல்ல, நடுவுல வர்ற பெரும்படையைப் பாரி எப்படி எதிர்கொள்வான்னு பயமா இருக்கு முடியனுக்கு.  நீ போய் நீலனைக் காப்பாத்து, நான் பார்த்துக்கிறேன்னு சொல்றான்.

தந்தமுத்துக்காரர்கள் 2 யானைக்கு ஏதோ மூலிகை சேர்மானத்தைச் சாப்பிடக் கொடுக்குறாங்க. யானைக்கு மதம் பிடிக்குறதைப் பத்தி நமக்குத் தெரியும்! அதுலயே 4 வகை மதம் இருக்காமாம்! எரிமதம்ன்னு ஒன்னு தான் அதுல ரொம்ப வீரியமானதாம்! அப்போ யானை எழுப்புற ஓசையைக் கேட்டு மனுஷனே பயந்து கீழ விழுந்துடுவானாம்! அந்த எரிமதத்தைத் தூண்டத் தான் இந்த மூலிகை மேட்டர்!

இங்க யானை ஆட ஆரம்பிச்சதும், பாரி முன்னே பாய்கிறான்! பாரியைச் சுற்றி 5 பேர் ஆயுதங்களோட ஓடி வருவாங்க! அவன் என்ன மாதிரியான ஆயுதத்தைக் கேட்கிறானோ அதை எடுத்துக் கொடுக்க! 5 லெவல் இருக்கு அதுல!

யானை பிளிறத் தொடங்கியதும் கோட்டையைச் சுத்தி நிற்குற அத்தனை யானையும் அடிச்சிப் பிடிச்சு ஓடத் தொடங்குது.

வேந்தர் படைக்குப் பக்கத்துல வந்ததும் ஆயுதத்துக்காக் கை நீட்டுறான் பாரி. மூவிலை வேலையும்,கண்டரக்கோடாரியையும் தர முன்வந்த வீரர்களிடம் மறுத்துவிட்டு.. ஐந்தாவதாக வந்தவனிடம் உள்ள ஏறுழ்தடியை வாங்குகிறான் பாரி. அவன் கண்களில் தெரியும் சீற்றம், அப்படியே எரிமதம் பிடித்த யானையின் கண்களை ஒத்திருந்தது.
தூரத்துல கோட்டைல யானைங்க போடுற சத்தம்,வீரர்கள் கிளப்பிய சத்தத்தையும் பார்த்து நடுங்கிப் போன மையூர் கிழார், தன்னைச் சுற்றி நின்ற வீரர்களிடம் நம்பிக்கையாகப் பேசிக் கொண்டே முன்னே வந்த போது.. எதிர்ப்பட்டக் காட்சியைக் கண்டு உறைந்து நிற்கிறார். ஏறுழ்தடியை சுழற்றிக் கொண்டு முன்னேறியவன் பறம்பின் தலைவன் பாரி.

அச்சம் மேலேற நகர்ந்தவனின் தலையைக் கொய்து வீசுகிறான் பாரி.
குலசேகரப் பாண்டியன் நைசா பின்னால போறதை பார்க்குறான் சோழன். அவனுக்குக் கால் சரியிருக்காது. அதுவும் பறம்பு கூட நடந்த போர்ல போனது தான்! உதவியில்லாம அவனால நகர முடியாது. ஓடியே போய் சேரன் கிட்ட உதவி கேட்குறான்.

அதுக்கு ஈடா பாழி நகருக்கான வரைபடத்தை அவன் கிட்ட நீட்டுறான். அடப்பாவி இது என் கைல இருந்திருந்தா.. இந்தப் போரே நடந்திருக்காதேடான்ற மாதிரி பார்க்குறான் சேரன். அந்த நேரத்துல சேரன் மேல ஈட்டி பாயுது!

கருங்கைவாணன் செத்த செய்தி கேட்டதும் படை மொத்தமா நிலைகுலைந்து போய்டுது! உடனே பொதியவெற்பனும்,சோழனும் பாரியை ரௌண்ட் கட்டுறானுங்க! சிறுபிள்ளைத்தனமா நடுங்கிட்டே வாளோட நிற்குறவனுங்களைத் தாக்காம, ஒரு நிமிஷம் நின்னு பார்க்குறான் பாரி.

ஏறுதழ்தடியைக் கொடுத்துட்டு கண்டராக்கோடாரியை வாங்குறான். ரெண்டு பேரையும் பொளந்து கட்டி.. தலையைத் துண்டாக்கி ஓட விட்றான்!
இந்தப் பக்கம் கோட்டைக்குள்ள நுழையுற முடியன் நீலனை மீட்குறார்! சீழ்க்கை ஒலியையும் எழுப்புறார்! வெற்றிக்குறி அது! உடனே எல்லாரும் கோட்டையை நோக்கி ஓடி வர்றாங்க!

தந்தமுத்துக்காரங்க கொண்டு வந்த யானை ஒன்னுல பாகனுக்குப் பக்கத்துல நீலனும்,அவன் பின்னால பாரியும் உட்கார்ந்து வர்றாங்க!

நீலனோட கால் இன்னும் சரியாகல! அவனால சரியா உட்கார முடியாம, 
பாரியோட இடது தோள்ல சாயுறான்! அதுவரைக்கும் எரிமதம் பிடிச்ச யானை மாதிரி கோபம் குறையாம இருந்த பாரிக்கு, நீலனோட இந்தச் செய்கை, மனசை சாந்தப்படுத்துது!

அடுத்துக் கொற்றவை விழா! வெற்றியைக் கொண்டாட! மயிலா-நீலனுக்கு ஆண் குழந்தை பிறக்குது! அதோட ரத்தத்தைக் கீறி தண்ணீல கரைச்சு.. சாப்பாடு பிசைஞ்சு அங்கங்க வீசுவாங்க!

உடம்பு முழுக்க குருதியை பூசிக்கொண்டு வந்து நிற்கிறான் பாரி. கையில் வில்லுடன்! தேக்கனின் நினைவோடுக் கையிலிருந்த வில்லை மலையில் தூக்கி வீசுகிறான்! அது கடைசியா அவர் குத்திக்கிட்ட வில்! அடுத்து இரவாதனின் மூவிலை வேலை மண்ணுக்குள் குத்தி நிறுத்தினான். அதுக்கு பூமாலை சூட்டி, இரவாதனை தெய்வமாகக் கும்பிட்றாங்க!

வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தக் கபிலரின் அருகே வந்தமர்கிறான் பாரி. பெண்களின் துணங்கை ஆட்டம் ஆவேசம் கொள்கிறது. அப்போது ஒரு பெண் ஆடுகிறாள்,மற்றவர்களைப் போலல்லாது தலையை ஆட்டி மெல்ல ஆடுகிறாள்! 

அது பொற்சுவை! அவளுக்கு ஒரு மண் சிலை வைத்து அவளையும் தெய்வமாக வணங்குறாங்க!

இதைப் பார்த்தக் கபிலருக்குக் கண்ணில் நீர் நிறைகிறது. தன் கண் முன்னே மாய்ந்து போன தன் மாணவியை நினைத்துக் கலங்குகிறார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அப்பெண்ணின் அருகே சென்று, அவள் கால் தொட்டு வணங்குகிறார்.

கபிலரை எழுப்பித் தன்னோடு அணைத்தபடி நகர்கிறான் பாரி. சிறிது நேரத்தில் வாரிக்கையன் எங்கே எனக் கேட்கிறார் கபிலர்.

“நான்காண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்கும் ஆதிமலைக்குப் போய்ருக்கிறார்” என்றான் பாரி.

அங்கே எதற்கு?” என்றவரிடம்..

“தேக்கன்,இரவாதன்,பொற்சுவை நிலைகொள்ள வேண்டிய இடம் இது தான். ஆனால் திசைவேழர் நிலை கொள்ள வேண்டிய இடம் அது தானே?, “ என் கிறான்.

உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் போன கபிலர் பாரியின் தோளைப் பற்ற வருகையில் அவர் கையைப் பற்றிய பாரி “அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்” என் கிறான்.

இது தான்! இது தான் பாரி!! வேள்பாரி! அவனோட எண்ணம்,நோக்கம் எல்லாம் இது தான்!!

கடைசியாக பனையன் மகனே பாடலைப் பாணர் கூட்டம் பாடுவதுடன் கதை நிறைவு பெறுகிறது!! நம் மனதையும் நிறையச் செய்கிறது!

பறம்பு மலையைச் சேர்ந்த கேரக்டர்ஸ் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு பாரி இருக்கான்! தேக்கன் தொடங்கி பழையன்,வாரிக்கையன்,நீலன்,உதிரன்,இரதவாதன்னு அத்தனை பேரும் பாரியோட அம்சங்கள் தான்! கபிலர் மேல் பாரி வைச்சிருக்கிற அன்பு,மரியாதை, நட்பு! ஏனோ,தானோன்ற நினைப்போட மலையேறி வந்தாலும், பாரியைப் புரிஞ்சிக்கிட்டதும் கபிலருக்கு அவன் மேல உருவாகுற அன்பு.. விவரிக்க முடியாததது! கிளைக்கதைகள், அதுக்குள்ள வர்ற கதாப்பாத்திரங்கள் ஏன் மரம்,செடி,கொடி,வேர்ன்னு அத்தனைக்கும் ஒவ்வொரு பயன் இருக்கு. அது ரீடர்ஸை பிரம்மிக்க வைக்குது!

சரித்திரத்தைப் படிக்கிறது நம் மொழியை,முன்னோர்களை, நம்ம பண்பாட்டை, பாரம்பரியத்தைப் புரிய வைச்சு.. நாமளும் இவங்க வரிசைல வர்ற ஒரு ஆளு தான்னு நினைக்க வைச்சுப் பெருமைப் பட வைக்குது! எப்போதும் போல தமிழ் மொழி மேல ஈடுபாடும்,வெறியும் அதிகரிக்குது!

வேள்பாரி.... நச்சுன்னு மனசுல நின்னுட்டான்!